NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift
Section 26 - Tamil
Q.1. "நன்றுபடு மருங்கில் தீதில் என்னும் தொன்றுபடு பழமொழி" எனப் பழமொழியைக் குறிப்பது
1. நான்மணிக்கடிகை
2. அகநானூறு
3. புறநானூறு விடை : 2
4. பழமொழி நானூறு
Q.2. கூடல் மாநகரில் ஆடல் வல்லான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் 64 என முதன்முதலில் வரையறுத்தவர்
1. கல்லாடர்
2. திருவாலவாயுடையார்
3. சேக்கிழார் விடை ; 1
4. பரஞ்ஜோதி முனிவர்
Q.3. ஆண் எருமைக்குத் தொல்காப்பிய மரபியல் கூறும் பெயர்
1. கிடாய்
2. களிறு
3. கண்டி விடை : 3
4. கலை
Q.4. நூலுக்குச் சிறப்புப் பாயிரம் அமைக்கும் மரபு மிகுதியாக வழங்கக் கால்கோலிட்டவர்
1. உ .வே. சாமிநாதையர்
2. சவுரிராயுலு நாயக்கர்
3. மாயூரம் வேதநாயகம் பிள்ளை விடை : 4
4. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
Q 5. அழையா விருந்தாளியை 'விளியா விருந்து' எனக் குறிப்பது
1. நற்றிணை
2. ஐங்குறுநூறு
3. அகநானூறு விடை : 4
4. பரிபாடல்
Q.6. 'ஆடவர் பெயரும் பீடுமெழுகி அதர்தொறும் பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்' எனக் குறிப்பது
1. அகநானூறு
2. நற்றிணை
3. பதிற்றுப்பத்து விடை : 1
4. புறநானூறு
Q.7. தமிழக அரசு முதன் முதலில் நாட்டுடைமையாக்கிய நூல்களின் ஆசிரியர்
1. தேசியவிநாகம் பிள்ளை
2. நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
3. சுப்ரமணிய பாரதி விடை : 3
4. பாரதிதாசன்
Q.8. தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகட்கும் மேலாகத் தடை செய்யப்பட்டிருந்தது
1. ஆரிய மாயை
2. நீதிதேவன் மயக்கம்
3. இராவண காவியம் விடை : 3
4. இரணியன் அல்லது இணையற்ற வீரன்
Q.9. ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியோர் எண்ணிக்கை
1. ஒன்பது
2. எட்டு
3. பத்து விடை : 1
4. பன்னிரண்டு
Q.10. நளன் சரிதம் பற்றிய குறிப்புடைய காப்பியம்
1. சீவக சிந்தாமணி
2. பெருங்கதை
3. சிலப்பதிகாரம் விடை : 3
4. மணிமேகலை
Q.11. 'இனி' என்பது வினையெச்சம் எனக் கூறியவர்
1. சேனாவரையர்
2. தெய்வச்சிலையார்
3. இளம்பூரணர் விடை : 2
4. நச்சினார்க்கினியர்
Q.12. தமிழின் முதல் சென்ரியூ கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
1. இன்குலாப்
2. அப்துல் ரகுமான்
3. ஈரோடு தமிழன்பன் விடை : 3
4. மேத்தா
Q.13. 'யுகசந்தி' என்னும் சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்
1. ஜெயகாந்தன்
2. அசோகமித்திரன்
3. கு.ப.ராஜகோபாலன் விடை : 1
4. புதுமைப்பித்தன்
Q.14. சமணப் பெண் துறவியால் எழுதப் பெற்ற காப்பியம்
1. யசோதரக் காவியம்
2. உதயணகுமார காவியம்
3. வளையாபதி விடை :2
4. நாககுமார காவியம்
Q.15. 'பழமொழிப் பதிகம்' பாடியவர்
1. சுந்தரர்
2. அப்பர்
3. மாணிக்கவாசகர் விடை : 2
4. சம்பந்தர்
Q.16. 'பொய்யில் புலவன் பொருளுரை'எனத் திருக்குறளைப் போற்றுவது
1. சீவக சிந்தாமணி
2. மணிமேகலை
3. பெருங்கதை விடை : 2
4. சூளாமணி
Q.17. அகவற்பாவின் சிற்றெல்லை
1. ஐந்தடி
2. ஆறடி
3. நாலடி விடை : 4
4. மூவடி
Q.18. செய்யுளில் ஒன்றைத் தொடங்கிப் பின் அதனை முடித்தற்கு உலகறி பொருளைக் கூறி முடிப்பது
1. வேற்றுப்பொருள் வைப்பணி
2. பொருள் பின்வருநிலையணி விடை : 1
3. சங்கீரண அணி
4. அவநுதியணி
Q.19. சங்கப் பெண்பாற் புலவர்களுள் அரச மங்கையர் :
1. ஆதிமந்தியார்
2. ஒக்கூர் மாசாத்தியர்
3. பொன்முடியார்
4. பெருங்கோப்பெண்டு
இவற்றுள்: விடை : 2
1. 1, 3 சரி
2. 1, 4 சரி
3. 1, 2, 3, 4 சரி
4. 1, 2 சரி
Q.20. ஈசனின் இணையடி நீழல் எவற்றைப் போன்றது என்கிறார் அப்பர்
1. பொய்கை
2. இளவேனில்
3. மாலை மதியம்
4. வீணை
இவற்றுள் : விடை : 4
1. 1, 2, 4 சரி
2. 1, 2, 3 சரி
3. 1, 2, 3, 4 சரியல்ல
4. 1, 2, 3, 4 சரி
Q.21. வைணவப் புலவர்களால் இயற்றப் பெற்றவை :
1. நான்மணிக்கடிகை
2. கார் நாற்பது
3. களவழி நாற்பது
4. திரிகடுகம்
இவற்றுள் : விடை : 1
1. 1, 2, 3, 4 சரி
2. 1, 2, 3, 4 சரியல்ல
3. 1, 2, 4 சரி
4. 1, 2, 3 சரி
Q.22. திருஞானசம்பந்தர் பயன்படுத்திய யாப்பு வகைகள்
1. ஏகபாதம்
2. மாலைமாற்று
3. யமகம்
4. நாலடி மேல் வைப்பு
இவற்றுள் :
1. 1, 2, 3, 4 சரி
2. 1, 2, 4 சரி
3. 1,2,3,4 சரியல்ல
4. 1, 2,3 சரி விடை : 1
Q.23. நனவோடைப் படைப்பாளிகள் அடிப்படைக் கருத்துக்கள்
1. கடந்தகாலம் என்பது முடிந்துபோன ஒன்று
2. வருங்காலம் என்பது புரிந்துகொள்ள முடியாதது
3. உண்மையாக எஞ்சி நிற்பது நிகழ்காலம் மட்டுமே
4. நிகழ்கணத்தில் நித்தியத்தின் விஸ்வரூபத்தைத் தேடிக் காண்பதே வாழ்க்கையின் இல்டசியம்
இவற்றுள் :
1. 1,2,3 சரி
2. 1, 2, 3, 4 சரியல்ல
3. 1, 2, 4 சரி
4. 1, 2, 3, 4 சரி விடை : 4
Q.24. திருக்குறள் கருத்தை விளக்க எழுந்தவை
1. இரங்கேச வெண்பா
2. சோமேசர் முதுமொழி வெண்பா
3. வடமலை வெண்பா
4. குமரேச வெண்பா
இவற்றுள் :
1. 1, 2, 3, 4 சரியல்ல
2. 1, 2, 3 சரி
3. 1, 2, 4 சரி
4. 1, 2, 3, 4 சரி விடை : 3
Q.25. வெண்பாவால் இயன்ற நிகண்டுகள்
1. உரிச்சொல் நிகண்டு
2. நாமதீப நிகண்டு
3. கயாதரம் நிகண்டு
4. அகப்பொருள் விளக்க நிகண்டு
இவற்றுள் :
1. 1, 2 சரி
2. 1, 2, 4 சரி
3. 1, 2, 3 சரி
4. 1, 2, 3, 4 சரி விடை : 1
Q.26. கரிகாற் பெருவளத்தானைப் பட்டுடைத் தலைவனாகக் கொண்டவை
1. சிறுபாணாற்றுப்படை
2. பெரும்பாணாற்றுப்படை
3. பொருநராற்றுப்படை
4. பட்டினப்பாலை
இவற்றுள் :
1. 3, 4 சரி
2. 1, 2 சரி
3. 1, 4 சரி
4. 2, 3 சரி விடை : 1
Q.27. தொல்காப்பியர் கூறும் குறிப்புமொழி என்னும் கூற்றிடை வைத்த குறிப்பு என்பது
1. எழுத்தோடு புணராது
2. சொல்லோடு புணராது
3. வெள்ளிடைமலையாகக் கருத்துரைப்பது
4. பொருட் புறத்தது
இவற்றுள் :
1. 1, 2, 3, 4 சரி
2. 1, 2, 4 சரி
3. 1, 2, 3, 4 சரியல்ல
4. 1, 2, 3 சரி விடை : 2
Q.28. மன்னரைத் துயில் எழுப்புவோராக மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்படுவோர்
1. சூதர்
2. மாகதர்
3. வேதாளிகர்
4. நாழிகை
இவற்றுள் :
1. 1, 2, 3, 4 சரியல்ல
2. 1, 2, 4 சரி
3. 1, 2, 3 சரி
4. 1, 2, 3, 4 சரி விடை : 4
Q.29. செய்குத்தம்பி பாவலர் செய்தவை :
1. சதாவதானம்
2. பதிற்றுப் பத்தந்தாதி
3. சீறாப்புராணத்திற்கு உரை
4. வள்ளலார் புகழ் பரப்பல்
இவற்றுள்:
1. 1, 2, 4 சரி
2. 1, 2, 3 சரி
3. 1, 2, 3, 4 சரி
4. 1, 2, 3, 4 சரியல்ல விடை : 3
Q.30. வைத்தியநாத தேசிகர் இயற்றியவை :
1. இலக்கண விளக்கம்
2. நல்லூர்ப் புராணம்
3. திருவாரூர் பன்மணி மாலை
4. ஞானஸ்நானம்
இவற்றுள் :
1. 1, 2, 3, 4 சரி
2. 1, 2, 3, 4 சரியல்ல
3. 1, 2, 3 சரி
4. 1, 2, 4 சரி விடை : 3
Q.31. இராபெர்ட் கால்டுவேல் எழுதிய உரைநடை நூல்கள் :
1. திருநெல்வேலி மாவட்ட வரலாறு
2. தாமரைத் தடாகம்
3. மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்
4. அடைக்கலநாயகி வெண்கலிப்பா
இவற்றுள் :
1. 1, 2, 4 சரி
2. 1, 2, 3, 4 சரி
3. 1, 2, 3 சரி
4. 1, 3, 4 சரி விடை : 1
Q.32. திருவெழு கூற்றிருக்கை என்னும் பெயரில் சிற்றிலக்கியம் படைத்தவர்கள்:
1. திருஞான சம்பந்தர்
2. திருமங்கை ஆழ்வார்
3. நக்கீர தேவநாயனார்
4. அருணகிரிநாதர்
இவற்றுள் :
1. 1, 2, 3, 4 சரி
2. 1, 2, 4 சரி
3. 1, 2, 3, 4 சரியல்ல
4. 1, 2, 3 சரி விடை : 1
Q.33. செய்யுளுள் அவ்வொடு சிவணும் இறுதிகள் :
1. கு
2. ஐ
3. ஆன்
4. இ
இவற்றுள் :
1. 1, 2, 3 சரி
2. 1, 2, 3, 4 சரியல்ல
3. 1, 2, 3, 4 சரி
4. 1, 2, 4 சரி விடை : 1
Q.34. 'செம்மை மாதர் திறம்புவதில்லை ' என்னும் பாரதி அதற்குக் காரணமாக அவர்களிடம் உள்ளனவாகக் கூறுவன
1. திமிர்ந்த ஞானச் செருக்கு
2. யார்க்கும் அஞ்சாத நெறி
3. நேர்கொண்ட பார்வை
4. நிமிர்ந்த நன்னடை
இவற்றுள் :
1. 1, 2, 3 சரி
2. 1, 2, 4 சரி
3. 1, 2, 3, 4 சரியல்ல
4. 1, 2, 3, 4 சரி விடை : 4
Q.35. உறுதிக்கூற்று (உ ) : நாவுக்கரசர் தாண்டக வேந்தர் எனப் போற்றப்படுகிறார்
காரணம் (கா ): கொச்சக ஒருபோகு எனும் பாவகையில் எழுசீர் கொண்டு பாடுவதில் வல்லவர் அவர் .
இவற்றுள் :
1. (உ ) பிழை, (கா ) சரி
2. (உ ) , (கா ) இரண்டும் பிழை
3. (உ ), (கா ) இரண்டும் சரி
4. (உ ) சரி , (கா ) பிழை விடை : 4
Q.36. உறுதிக்கூற்று (உ ): ' காலனும் காலம் பார்க்கும் ' என்கிறது புறநானூறு
காரணம் (கா ) : எந்தச் செயலையும் நல்ல நேரம் பார்த்தே சங்க காலத்தில் செய்தனர்.
இவற்றுள் :
1. (உ ), (கா ) இரண்டும் பிழை
2. (உ ) பிழை , (கா ) சரி
3. (உ ) சரி , (கா ) பிழை
4. (உ ) , (கா ) இரண்டும் சரி விடை : 4
Q.37. உறுதிக்கூற்று (உ ) :சிலர் ஆற்றும் உரையிலோ , படைக்கும் கவிதையிலோ இரட்டுற மொழிதல் அமைந்து இன்பம் ஊட்டும் .
காரணம் (கா ): இரு பொருள்படச் சிலேடை நயத்தோடு அமைவது அது
இவற்றுள் :
1. (உ ), (கா ) இரண்டும் சரி
2. (உ ) பிழை , (கா ) சரி
3. (உ ) சரி , (கா ) பிழை
4. (உ ), (கா ) இரண்டும் பிழை விடை : 1
Q.38. உறுதிக்கூற்று (உ ) : நாட்டார் கலைகளுள் ஒன்று புரவியாட்டம் எனப்படுகிறது.
காரணம் (கா ) : குதிரை மீது சவாரி செய்தபடியே பதின்மர் ஆடும் ஆட்டம் அது .
இவற்றுள்:
1. (உ ), (கா ) இரண்டும் சரி
2. (உ ), (கா ) இரண்டும் பிழை
3. (உ ) சரி (கா ) பிழை
4. (உ ) பிழை , (கா ) சரி விடை : 3
Q.39. உறுதிக்கூற்று (உ ): பண்டு ஆடப்பெற்று வந்த பதினோர் ஆடல்களைத் தெய்வ விருத்தி என்ப .
காரணம் (கா ) : அவுணரால் வெல்லப் பெற்ற தெய்வங்களால் மகிழ்ச்சியுண்டு ஆடப்பெற்றவை அவை .
இவற்றுள் :
1. (உ ) சரி , (கா ) பிழை
2. (உ ) பிழை , (கா ) சரி
3. (உ ) , (கா ) இரண்டும் சரி
4. (உ ), (கா ) இரண்டும் பிழை விடை : 1
Q.40. உறுதிக்கூற்று (உ ) : கூத்துகளும் குரவைக்கூத்து என்பது ஒன்று .
காரணம் (கா ): மகளிர் வட்டமாக நின்று கைகோத்து ஆடுவது அது .
இவற்றுள் :
1. (உ ) சரி , (கா ) பிழை
2. (உ ), (கா ) இரண்டும் பிழை
3. (உ ), (கா ) இரண்டும் சரி
4. (உ ) பிழை , (கா ) சரி விடை : 3
Q.41. உறுதிக்கூற்று (உ ) : மதுரைக் காஞ்சியைக் கூடற்றமில் எனவும் குறிப்பிடுவர்.
காரணம் (கா) : நிலையாமை கூறி அரசனை உயர் நெறிக்கண் உய்ப்பதாக அமைந்தது அது .
இவற்றுள் :
1. (உ ) பிழை , (கா ) சரி
2. (உ ), (கா ) இரண்டும் சரி
3. (உ ), (கா ) இரண்டும் பிழை
4. (உ ) சரி , (கா ) பிழை விடை : 4
Q 42. உறுதிக்கூற்று (உ ): சிற்பங்களுள் புடைப்புச் சிற்பம் என்பது ஒரு வகை.
காரணம் (கா ): பொருளின் முன்புறம் , பின்புறம் முதலிய முழு உருவமும் தெரிய அமைக்கப்படுவது அது .
இவற்றுள் :
1. (உ ) சரி , (கா ) பிழை
2. (உ ) பிழை , (கா ) சரி
3. (உ ) , (கா ) இரண்டும் பிழை
4. (உ ), (கா ) இரண்டும் சரி விடை : 1
Q 43. உறுதிக்கூற்று (உ ) : சித்திரக்காரர் கண்ணுள் வினைஞர் என்று கூறப்படுகின்றனர் .
காரணம் (கா ): நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர் அவரே .
இவற்றுள்:
1. (உ ) பிழை , (கா ) சரி
2. (உ ) , (கா ) இரண்டும் சரி
3. (உ ) சரி , (கா ) பிழை
4. (உ ) , (கா ) இரண்டும் பிழை விடை : 2
Q 44. உறுதிக்கூற்று (உ ) : பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று கைந்நிலை எனப் பெயர் உடையது.
காரணம் (கா): அக ஒழுக்கம் பற்றியப் பேசுவது அது .
இவற்றுள்:
1. (உ ) சரி ,(கா ) பிழை
2. (உ ) பிழை , (கா ) சரி
3. (உ ) , (கா ) இரண்டும் சரி
4. (உ ), (கா ) இரண்டும் பிழை விடை: 3
Q 45. உறுதிக்கூற்று (உ ): இசைக் கருவிகளுள் ஒன்று இடக்கை ஆகும்.
காரணம் (கா): வலக்கையால் தாங்கிக் கொண்டு இடக்கையால் வாசிக்கப்படும் பக்கவாத்தியம் அது .
இவற்றுள்:
1. (உ ) பிழை , (கா) சரி
2. (உ ) , (கா) இரண்டும் சரி
3. (உ), (கா) இரண்டும் பிழை
4. (உ) சரி , (கா) பிழை விடை: 4
Q 46. உறுதிக்கூற்று (உ ): சிவாலயங்களுள் சில , பாடல் பெற்ற தலங்கள் எனப்படுகின்றன .
காரணம்(கா): நாயன்மார்கள் நேரில் சென்று காணாது தமது பாடல்களில் பதிவு செய்துள்ள தலங்கள் அவை .
இவற்றுள்:
1. (உ) பிழை , (கா) சரி
2. (உ) , (கா) இரண்டும் பிழை
3. (உ), (கா) இரண்டும் சரி
4. (உ) சரி , (கா) பிழை விடை: 4
Q 47. உறுதிக்கூற்று (உ): புகார் நகரில் ஆலமுற்றம் இருந்ததை அகநானூறு வழி அறியலாம்.
காரணம் (கா): அங்கிருந்த சிவன் கோவில் அது .
இவற்றுள்:
1. (உ), (கா) இரண்டும் சரி
2. (உ) சரி , (கா) பிழை
3. (உ) பிழை , (கா) சரி
4. (உ) , (கா) இரண்டும் பிழை விடை : 1
Q 48. உறுதிக்கூற்று (உ): கதை பொதி படைப்புக்களில் அமையும் உத்திகளுள் பின்னோக்கு உத்தியும் ஒன்று .
காரணம் (கா): கதையோட்டத்திற்கேற்ப கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறி நிகழ்கால நிகழ்ச்சிக்குத் துணை நிற்கும் நோக்கில் கையாளப்படுவது அது .
இவற்றுள்:
1. (உ) சரி , (கா) பிழை
2. (உ) பிழை , (கா) சரி
3. (உ), (கா) இரண்டும் சரி
4. (உ), (கா) இரண்டும் பிழை விடை: 3
Q 49. உறுதிக்கூற்று (உ): ஆல் , ஏல் போன்ற விகுதிகளை உடைய விளையெச்சங்கள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படாவிடினும் அவை சங்க இலக்கியத்தில் பயின்று வருகின்றன .
காரணம் (கா): தொல்காப்பியத்திற்குப் பிந்தைய காலத்திலேயே வழக்கிற்கு வந்தவையாக அவை இருந்திருக்க வேண்டும் .
இவற்றுள்:
1. (உ) பிழை , (கா) சரி
2. (உ), (கா) இரண்டும் சரி
3. (உ), (கா) இரண்டும் பிழை
4. (உ) சரி , (கா ) பிழை விடை: 2
Q 50. உறுதிக்கூற்று (உ): ஓவியத் தொழிலுக்கு வட்டிகைச் செய்தி எனும் பெயரும் உண்டு .
காரணம் (கா): துகிலிகையைக் கொண்டு ஓவியம் தீட்டுவர் .
இவற்றுள்:
1. (உ) பிழை , (கா) சரி
2. (உ) , (கா) இரண்டும் சரி
3. (உ) சரி , (கா) பிழை
4. (உ), (கா) இரண்டும் பிழை விடை: 2
Q 51. உறுதிக்கூற்று (உ): உபதேசரத்தின மாலையின்படி , திருவாய்மொழியைக் காத்த குணாளர்கள் பிள்ளான் , நஞ்சீயர் , பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை , மணவாள யோகி ஆகிய ஐவர் ஆவர் .
காரணம்(கா): குடத்திலிட்ட விளக்காக உள்ள மூலநூலைக் குன்றிலிட்ட விளக்காக ஆக்கிய வியாக்கியானிகள் ஆவர்கள் .
இவற்றுள் :
1. (உ), (கா) இரண்டும் சரி
2. (உ) சரி, (கா) பிழை
3. (உ) பிழை, (கா) சரி
4. (உ), (கா) இரண்டும் பிழை விடை: 1
Q 52. உறுதிக்கூற்று (உ): நாட்டார் கதைப்பாடல் வடிவங்களுள் கொலைச்சிந்து என்பதும் ஒன்று .
காரணம் (கா): தற்கொலை ,விபத்து ,தொற்று நோய் , இயற்கைச்சீற்றம் முதலியவற்றால் நேரும் உயிரிழப்பு அதற்கான காரணம் முதலியவை குறித்து மக்களுக்குத் தெரிவித்து அவர்களுக்கு விழிப்பு ஊட்டும் பொருட்டுச் சிந்துப் பாவகையால் பாடப்படுவது அது.
இவற்றுள்:
1. (உ) சரி , (கா) பிழை
2. (உ) பிழை , (கா) சரி
3. (உ), (கா) இரண்டும் பிழை
4. (உ), (கா) இரண்டும் சரி விடை: 4
Q 53. உறுதிக்கூற்று (உ): சாத்திர நூல்களுள் சில பண்டார சாத்திரங்கள் எனப்படுகின்றன .
காரணம் (கா): குறிப்பிடத்தக்க சிறப்புடைய ஆதீனச் சார்பு நூல்கள் அவை.
இவற்றுள் :
1. (உ) சரி , (கா) பிழை
2. (உ), (கா) இரண்டும் பிழை
3. (உ) பிழை , (கா) சரி
4. (உ), (கா) இரண்டும் சரி விடை : 4
Q 54. உறுதிக்கூற்று (உ): வேற்றுமைப் புணர்ச்சி , அல்வழிப் புணர்ச்சி எனப் புணர்ச்சிகள் இருவகைப் படுத்தப்பட்டுள்ளன .
காரணம் (கா): சந்தி மாற்றத்தில் இவ்விருவகைப் புணர்ச்சிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
இவற்றுள் :
1. (உ), (கா) இரண்டும் பிழை
2. (உ) பிழை , (கா) சரி
3. (உ) சரி , (கா) பிழை
4. (உ), (கா) இரண்டும் சரி விடை: 4
Q 55. நிரல்படுத்துக: ஏலாதி கூறும் உயிரின் அறுவகை அடிப்படைத் தொழில்களுள் முதல் நான்கு
1. எடுத்தல்
2. நிமிர்த்தல்
3. முடக்கல்
4. நிலை
இவற்றுள்:
1. 4, 2, 3, 1
2. 1, 3, 2, 4
3. 3, 1, 4, 2
4. 2, 4, 1, 3 விடை : 2
Q 56. நிரல்படுத்துக : ஏழிசைகளில் இறுதி நான்கு
1. விளரி
2. உழை
3. தாரம்
4. இளி
இவற்றுள் :
1. 3, 1, 4, 2
2. 2, 4, 1, 3
3. 4, 2, 3, 1
4. 1, 3, 2, 4 விடை : 2
Q 57. நிரல்படுத்துக :குறிஞ்சிப்பாட்டில் கூறப்படும் மலர்களின் பட்டியலில் இடம்பெறும் முதல் நான்கு
1. ஆம்பல்
2. செங்கழுநீர்
3. செங்காந்தள்
4. அனிச்சம்
இவற்றுள்:
1. 4, 2, 3, 1
2. 3, 1, 4, 2
3. 1, 3, 2, 4
4. 2, 4, 1, 3 விடை: 2
Q 58. நிரல்படுத்துக : பெரும் பஞ்சமூலங்கள்
1. வாகை
2. பெருங்குமிழ்
3. பாதிரி
4. வில்வம்
5. தழுதாழை
இவற்றுள்:
1. 4, 2, 5, 3, 1
2. 2, 4, 1, 5, 3
3. 3, 5, 1, 4, 2
4. 1, 3, 5, 2, 4 விடை: 1
Q 59. நிரல்படுத்துக : நட்புகொள்ள ஆராய வேண்டியவை
1. குற்றம்
2. குணன்
3. குன்றா இனன்
4. குடிமை
இவற்றுள்:
1. 2, 4, 1, 3
2. 3, 1, 4, 2
3. 4, 2, 3, 1
4. 1, 3, 2, 4 விடை:1
Q 60. நிரல்படுத்துக : தொல்காப்பியர் கூறும் எழுவாய் வேற்றுமையின் பயனிலை வகைகளுள் முதல் நான்கு
1. வியங்கொள வருதல்
2. வினாவிற் கேற்றல்
3. பொருண்மை சுட்டல்
4. வினைநிலை உரைத்தல்
இவற்றுள்:
1. 3, 1, 4, 2
2. 1, 3, 2, 4
3. 4, 2, 3, 1
4. 2, 4, 1, 3 விடை: 1
Q 61. தொல்காப்பியம் கூறும் பத்துவகை எஞ்சு பொருட் கிழவிகளுள் முதல் நான்கு
1. ஒழியிசை
2. வினை
3. பெயர்
4. பிரிநிலை
இவற்றுள்:
1. 1, 3, 2, 4
2. 2, 4, 1, 3
3. 4, 2, 3, 1
4. 3, 1, 4, 2 விடை: 3
Q 62. நிரல்படுத்துக : வித்தியா தத்துவம் ஏழனுள் முதல் நான்கு
1. வித்தை
2. நியதி
3. கலை
4. காலம்
இவற்றுள்:
1. 4, 2, 3, 1
2. 2, 4, 1, 3
3. 1, 3, 2, 4
4. 3, 1, 4, 2 விடை: 1
Q 63. நிரல்படுத்துக : இடும்பைக் கொள்கலமாம் மக்கள் யாக்கை கொண்டிருப்பது
1. மூத்தல்
2. இறத்தல்
3. பிறத்தல்
4. பிணிபட்டு இரங்கல்
இவற்றுள்:
1. 3, 1, 4, 2
2. 2, 4, 1, 3
3. 1, 3, 2, 4
4. 4, 2, 3, 1 விடை:1
Q 64. நிரல்படுத்துக : சீவக சிந்தாமணியின் இறுதி நான்கு இலம்பகங்கள்
1. பூமகள் இலம்பகம்
2. நாமகள் இலம்பகம்
3. முக்தி இலம்பகம்
4. மண்மகள் இலம்பகம்
இவற்றுள்:
1. 4, 2, 3, 1
2. 2, 4, 1, 3
3. 1, 3, 2, 4
4. 3, 1, 4, 2 விடை: 2
Q 65. நிரல்படுத்துக : பின்வரும் செய்யுள் அடிகள்
1. அடக்க வல்லவன் ஐய பவக்கடல்
2. கெடுக்க வல்லதும் கெட்டவர் தங்களை
3. கடக்க வல்லவன் ஆவன் கடித ரோ
4. எடுக்க வல்லதும் இம்மனம் என்ற தை
இவற்றுள் :
1. 3, 1, 4, 2
2. 1, 3, 2, 4
3. 2, 4, 1, 3
4. 4, 2, 1, 3 விடை : 3
Q 66. நிரல்படுத்துக : 'அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும் ' எனத் தொல்காப்பியர் கூறும் பதினெட்டனுள் முதல் நான்கு
1. ஆண்மை
2. மூப்பு
3. குடிமை
4. இளமை
இவற்றுள்:
1. 1, 3, 2, 4
2. 4, 2, 3, 1
3. 3, 1, 4, 2
4. 2, 4, 1, 3 விடை: 3
Q 67. நிரல்படுத்துக : சிலப்பதிகாரத்தின் படி ஒன்றன் வழி ஒன்று நேர்பட்டு நின்ற இசைக் கருவிகள்
1. தண்ணுமை
2. குழல்
3. ஆமந்திரிகை
4. யாழ்
5. முழவு
இவற்றுள்:
1. 4, 2, 5, 3, 1
2. 3, 5, 1, 4, 2
3. 2, 4, 1, 5, 3
4. 1, 3, 5, 2, 4 விடை: 3
Q 68. நிரல்படுத்துக : நெடுநல்வாடை கூறும் 'குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப்பானாள் ' கொடுமைகள்
1. மா மேயல் மறத்தல்
2. பறவை பறப்பன வீழல்
3. மந்தி கூரல்
4. கறவை கன்றுகோள் ஒழிதல்
இவற்றுள்:
1. 1, 3, 2, 4
2. 3, 1, 4, 2
3. 2, 4, 1, 3
4. 4, 2, 3, 1 விடை: 1
Q 69. நிரல்படுத்துக: நன்னூல் சிறப்புப் பாயிரம் கூறும் நான்கு எல்லைகள்
1. வேங்கடம்
2. குமரி
3. குடகம்
4. குணகடல்
இவற்றுள்:
1. 3, 1, 4, 2
2. 4, 2, 3, 1
3. 1, 3, 2, 4
4. 2, 4, 1, 3 விடை: 2
Q 70. நிரல்படுத்துக:நன்னூல் கூறும் 32 உத்திகளுள் முதல் நான்கு
1. நுதலிப்புகுதல்
2. தொகுத்துச் சுட்டல்
3. ஓத்துமுறை வைப்பு
4. வகுத்துக் காட்டல்
இவற்றுள்:
1. 4, 2, 3, 1
2. 3, 1, 4, 2
3. 2, 4, 1, 3
4. 1, 3, 2, 4 விடை: 4
Q 71. பொருத்துக :
(a ) மாரி வாயில் (1) அரசகேசரி
(b ) மண்ணியல் சிறுதேர் (2) முத்துத் தம்பிப் பிள்ளை
(c ) பிரபோத சந்திரோதயம் (3) நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்
(d ) இரகுவம்சம் (4)பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்
1. (a )-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
2. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3. (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
4. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3) விடை :3
Q 72. பொருத்துக :
(a) வருடோலி (1) ப்
(b) மருங்கொலி (2) ர்
(c) மூக்கொலி (3) ல்
(d) அடைப்பொலி (4) ம்
1. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
2. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
4. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3) விடை: 2
Q 73. பொருத்துக :
(a )திருவானைக்கா உலா (1) தண்டபாணி சுவாமிகள்
(b ) திருச்செந்தில் உலா (2) காளமேகப் புலவர்
(c ) திருவாரூர் உலா (3) பலபட்டடைச் சொக்கநாதர்
(d ) தேவை உலா (4) அந்தகக்கவி வீரராகவர்
1. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
4. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3) விடை : 4
Q 74. பொருத்துக :
(a ) பக்தியற்றோர் கதியடையார் (1) பத்திரகிரியார்
தாண்டவக்கோனே
(b ) ஊரலைந்தாலும் ஒன்றையுமே
நாடாதே (2) இடைக்காட்டு சித்தர்
(c ) மெய்யூரில் போவதற்கு
வேதாந்த வீடறியேன் (3) அகப்பேய்ச் சித்தர்
( d) பெண்ணைத் தாய்போல்
நினைத்துத் தவம் முடிப்பது
எக்காலம் (4) அழுகுணிச் சித்தர்
1. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2. (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
3. (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
4. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1) விடை: 4
Q 75. பொருத்துக :
(a ) தசரதன் குறையும்
கைகேயி நிறையும் (1)டி .கே .இரவீந்திரன்
(b ) இராவணன் மாட்சியும்
வீழ்ச்சியும் (2) வெ . பெருமாள்சாமி
(c ) சிலப்பதிகாரம் :மறுக்கப்பட்ட
நீதியும் மறைக்கப்பட்ட
உண்மையும் (3) நாவலர்.ச.சோமசுந்தர பாரதியார்
(d ) மொகலாயர்களின்
எழுச்சியும் வீழ்ச்சியும் (4) அ .ச.ஞானசம்பந்தன்
1. (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
2. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
4. (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1) விடை: 4
Q 76. பொருத்துக :
(a ) பாறைக்காணம் (1) சீவல் விற்போருக்குரிய வரி
(b ) புட்டகம் (2) வண்ணாருக்குரிய வரி
(c ) எடுத்துக்காட்டுப் பச்சை (3) தராசு செய்வோருக்குரிய வரி
(d ) எடுத்தளவு (4) தானிய விலைத் தரகருக்குரிய வரி
1. (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
2. (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
3. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4. (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1) விடை: 3
Q 77. பொருத்துக :
(a ) க.நா. சுப்பிரமணியம் (1) புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
(b ) வல்லிக்கண்ணன் (2) இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
(c ) அ. சா.ஞானசம்பந்தன் (3) வாழும் வள்ளுவம்
(d ) வா.செ.குழந்தைசாமி (4) கம்பன் புதிய பார்வை
1. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
3. (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
4. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3) விடை: 4
Q 78. பொருத்துக :
(a ) தமிழ்நாடன் (1) அரங்கநாதன்
(b ) கலாப்பிரியா (2) ஜகன்னாதன்
(c ) ஞானக்கூத்தன் (3) சுப்பிரமணியன்
(d ) புவியரசு (4) டி . கே. சோமசுந்தரம்
1. (a )-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3. (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
4. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2) விடை: 1
Q 79. பொருத்துக :
(a ) சிலம்பின் சிறுநகை (1) முடியரசன்
(b ) மாதவி காவியம் (2) வாணிதாசன்
(c ) வீரகாவியம் (3) தமிழ் ஒளி
(d ) கொடிமுல்லை (4) சாலை இளந்திரையன்
1. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
2. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
4. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2) விடை: 3
Q 80. பொருத்துக :
(a ) அரும்பொருள் செய்வினை (1) ஓரம்போகியார்
தப்பற்கும் உரித்தே
(b ) முகம்தானே கொட்டிக் (2) ஓதலாந்தையர்
கொடுக்கும் குறிப்பு
(c ) பொறை எனப்படுவது (3) மருதநில நாகனார்
போற்றாரைப் பொறுத்தல்
(d ) புதைத்தல் ஒல்லுமோ (4) நல்லந்துவனார்
ஞாயிற்றது ஒளியே
1. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2. (a)-(2), (b)-(3), (c)-(2), (d)-(1)
3. (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
4. (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1) விடை: 2
Q 81. பொருத்துக :
(a ) அல்லியம் (1) முருகன் அவுணரை வென்று ஆடியதைக்
காட்டுவது
(b ) கொடுகொட்டி (2) போர்க்கோலம் பூண்டு வந்த அவுணர்
மோகித்து விழுந்து இறக்கும்படி திருமகள்
ஆடியதைக் காட்டுவது
(c ) குடைக்கூத்து (3) திரிபுரம் எரித்த மகிழ்ச்சியில் சிவன்
கைக்கொட்டி ஆடியதைக் காட்டுவது
(d ) பாவை (4) கண்ணன் யானையின் மருப்பொடித்ததைக்
காட்டுவது .
1. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
3. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1) விடை: 2
Q 82. பொருத்துக :
(a ) இராமாயணம் அகவல் (1) வியாசகப் பெருமாளையர்
(b ) கச்சித்திரு அகவல் (2) மாணிக்கவாசகர்
(c ) கபிலர் அகவல் (3) பட்டினத்தார்
(d ) கீர்த்தித்திரு அகவல் (4)பின்னத்தூர் நாராயணசாமி
1. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
2. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
4. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1) விடை: 1
Q 83. பொருத்துக :
(a ) நோக்கப்பொருள் எச்சம் (1) கண்ணன் பாடக்கேட்டேன்
(b ) விளைவுப்பொருள் எச்சம் (2) கண்ணன் பாட வந்தான்
(c ) காரணப்பொருள் எச்சம் (3) கறைபோகத் துணியைத் துவைத்தாள்
(d ) செய்யப்படுபொருள் எச்சம் (4) மழை பெய்யக்குளம் நிறைந்தது
1. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
2. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
3. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2) விடை: 1
Q 84. பொருத்துக :
(a ) சுட்டுவிரல் (1) தேனரசன்
(b ) ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2) அப்துல் ரகுமான்
(c ) கைது செய்யப்பட்ட நியாயங்கள் (3) மு. மேத்தா
(d ) வெள்ளை ரோஜா (4) பொன் செல்வகணபதி
1. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
4. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2) விடை: 2
Q 85. பொருத்துக :
(a ) ஆலத்தூர் கிழார் (1)மனையுறை மகளிர்க்கு
ஆடவர் உயிர்
(b ) கோப்பெருஞ் சோழன் (2) ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்
(c ) பாலைபாடிய (3) ஒருவர் செய்தி கொன்றோர்க்கு உய்தி
பெருங்கடுங்கோ இல்
(d ) உகாய்க்குடி கிழார் (4) தீதில் யாக்கையோடு மாய்தல் தவத்
தலையே
1. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
2. (a)-(3), (b)-(4), (C)-(1), (d)-(2)
3. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2) விடை: 2
Q 86. பொருத்துக :
(a ) சௌமியன் (1) பாஷ்யம்
(b ) சின்னக்குத்தூசி (2) மு . கருணாநிதி
(c ) சேரன் (3) அண்ணா
(d ) சாண்டில்யன் (4) தியாகராஜன்
1. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2. (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
3. (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
4. (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3) விடை: 3
Q 87. பொருத்துக :
(a ) எருது (1) அலுப்பும்
(b ) எலி (2) குனுகும்
(c ) குரங்கு (3) எக்காளமிடும்
(d ) புறா (4) கீச்சிடும்
1. (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
2. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
4. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2) விடை: 4
Q 88. பொருத்துக :
(a ) நாலடியார் (1) ஹென்றி பவர்
(b ) சிலப்பதிகாரம் (2) எல்லிஸ்
(c ) சீவகசிந்தாமணி (3) போப்
(d ) திருக்குறள் (4) ஆலன் டேனியல்
1. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2)
2. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
3. (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
4. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2) விடை: 4
Q 89. பொருத்துக :
(a ) சென்னைக் கூரியர் (1) 1831
(b ) தமிழ் இதழ் (2) 1785
(c ) தினவர்த்தினி (3) 1882
(d ) சுதேச மித்திரன் (4) 1856
1. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1)
3. (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
4. (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3) விடை: 1
Q 90. பொருத்துக :
(a ) சாஅய் (1) நோய்
(b ) சிறுமை (2) ஐம்மை
(c ) அரி (3) வறுமை
(d ) ஒற்கம் (4) உள்ளதன் நுணுக்கம்
1. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
2. (a)-(3), (b)-(4), (c)-(2), (d)-(1)
3. (a)-(2), (b)-(3), (c)-(1), (d)-(4)
4. (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3) விடை: 4
குறிப்பு: பின்வரும் கவிதைப் பகுதியை ஊன்றிப் படித்து அதன் பின்வரும் வினாக்களுக்கு ஏற்ற விடைகளைத் தெரிவு செய்க .
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்து சொல்வேன் ;
சீறுக்கெல் லாம்முத லாகும் - ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும் .
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன் ;
மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார் .
தெய்வம்ப லபல சொல்லிப் - பகைத்து பகைத்
தீயைவ ளர்ப்பவர் மூடர் ;
உய்வத னைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொரு ளாவது தெய்வம் .
யாரும்ப ணித்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம் ;
பாருக்குள் ளேதெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டா .
நிகரென்று கொட்டு முரசே ! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம் !
தகரென்று கொட்டு முரசே ! - பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம் .
ஒன்றென்று கொட்டு முரசே ! - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே !
நன்றென்று கொட்டு முரசே ! - இந்த
நானில மாந்தருக் கெல்லாம் !
Q 91. "கொட்டு முரசே " எனக் கவிஞர் கூறக் காரணங்கள் :
1. உலக மக்கள் ஒன்றுபட்டு அன்பில் ஓங்க வேண்டும் .
2. மக்கள் யாவரும் ஒரு நிகர் .
3. மக்கள் இனங்கள் பற்பல .
4. சாதி வகுப்பு எல்லாம் பொய்மை .
இவற்றுள்:
1. 1, 2, 3 சரி
2. 2, 3, 4 சரி
3. 1, 2, 4 சரி
4. 1, 3, 4 சரி விடை: 3
Q 92. பொருத்துக :
(a ) பெண்ணுக்கு ஞானம் வைத்தான் (1) மூடர்
(b ) உலகில் வாழ்பவர் அனைவரும் (2) தெய்வம்
(c ) சீருக்கெல்லாம் முதல் (3) நிகர்
(d ) மாதர் அறிவைக் கெடுத்தவர் (4) ஈசன்
1. (a)-(3), (b)-(4), (c)-(1), (d)-(2)
2. (a)-(4), (b)-(3), (c)-(2), (d)-(1)
3. (a)-(2), (b)-(1), (c)-(4), (d)-(3)
4. (a)-(2), (b)-(3), (c)-(4), (d)-(1) விடை: 2
Q 93. நிரல்படுத்துக :
மூடர் எனக் கருதுதற்குரியோர்
1. தெய்வம் ஒன்றன்று என்போர்
2. பகைத்தீயை மூட்டுவோர்
3. மாதர் அறிவைக் கெடுத்தோர்
4. தெய்வம் ஒன்றே என்பதறியோர்
இவற்றுள்:
1. 3, 1, 2, 4
2. 2, 4, 1, 3
3. 4, 1, 2, 3
4. 2, 3, 4, 1 விடை: 1
Q 94. உறுதிக்கூற்று (உ): உயிர்கள் அனைத்திலும் தெய்வம் உறைகிறது .
காரணம் (கா): ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிர்கள்
எல்லாம் ஒரே கடவுளின் படைப்பு என மக்கள்
நம்புகின்றனர் .
இவற்றுள்:
1. (உ) சரியென்று , (கா) சரியன்று
2. (உ) சரி , (கா) சரி
3. (உ) சரி , (கா) சரியன்று
4. (உ) சரியன்று , (கா) சரி விடை: 3
குறிப்பு: பின்வரும் உரைநடைப் பகுதியை படித்து அதன் அடியில் கண்ட
வினாக்களுக்குரிய விடையினைத் தெரிவு செய்க.
மனிதனுடைய நல்வாழ்விற்கு உதவுகிற எல்லாத் தொழில்களையும்
கலைகள் என்று கூறலாம் . தச்சு வேலை , கருமார வேலை , உழவு முதலிய
தொழில்கள் யாவும் கலைகளே . இப்போதுக் கலைகளுக்கு வேறுபட்டவை
அழகுக் கலைகள் . அழகுக் கலைக்கு இன் கலை என்றும் , கவின் கலை என்றும் , நற்கலை என்றும் வேறுபெயர்கள் உண்டு . நாகரிகமாக வாழும்
மக்கள் உண்டு, உடுத்து , உறங்குவதனோடு மட்டும் திருப்தியடைவதில்லை .
அவர்கள் மனம் வேறு இன்பத்தை அடைய விரும்புகிறது . அந்த இன்பத்தைத் தருவது அழகுக் கலைகளே . நாகரிக மக்கள்,நிறை மனம் - திருப்தி அடைவதற்குக் துணையாயிருப்பவை அவைதாம் . மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும் , இன்பத்தையும் அளிக்கிற
பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு . மனிதன் தன்னுடைய அறிவினாலும் ,
மனோபாவத்தினாலும் , கற்பனையினாலும் அழகுக்கலைகளை அமைத்து
அவற்றின் மூலமாக உணர்ச்சியையும் அழகையும் , இன்பத்தையும் காண்கிறான். அழகுக்கலைகள் மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்ச்சியையும் , இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிற
-படியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகி
-றார்கள் ; போற்றி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்பத்து மகிழ்கிறார்கள் .
அழகுக் கலையை விரும்பாத மனிதனை அறிவு நிரம்பாத விலங்கு என்றே
கூறவேண்டும் . அவனை முழு நாகரிகம் பெற்றவன் என்று கூற முடியாது. அழகுக்கலைகள் ஐந்து அவை கட்டிடக்கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை , இசைக்கலை , காவியக்கலை என்பன. பண்டைக் காலத்தில் நமது நாட்டவர் கட்டடக்கலையையும் , சிற்பக்கலையையும் ஒரே பெயரால் சிற்பக்கலை
என்று வழங்கினார்கள் . ஆனால் கட்டடக்கலை வேறு , சிற்பக்கலை வேறு .
காவியக்கலையுடன் நாடகக்கலையும் அடங்கும். அழகுக் கலைகளில் காவியங்களை, இசைக்கலை இரண்டையும் பண்டைத் தமிழர் இயல் , இசை,
நாடகம் என்ற மூன்றாகப் பிரித்தனர். அவர்கள் இயற்றமிழ் என்று கூறியது காவியக்கலையை . செய்யுள் நடையிலும் , வசன நடையிலும் காவியம் அமைப்பது இயற்றமிழ் எனப்பட்டது . செய்யுளை இசையோடு பாடுவது இசைத்தமிழ் எனப்பட்டது. இயலும் , இசையும் கலந்து ஏதேனும் கருத்தையோ, கதையையோ தழுவி வருவது நாடகத்தமிழ் எனப்பட்டது. நாடகத்தமிழில் நடனம் , நாட்டியம், கூத்து என்பனவும் அடங்கும் . எனவே அழகுக்கலைகள் ஐந்தையும் விரித்துக் கூறுமிடத்து , கட்டடக்கலை , சிற்பக்கலை, ஓவியக்கலை,இசைக்கலை, கூத்துக்கலை (நடனம் - நாட்டியம்)
காவியக்கலை , நாடகங்களை என ஏழகக் கூறப்படும். அழகுக் கலைகளின்
நோக்கமாக இருந்த போதிலும் , அவை வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக உருவடைந்து வளர்ந்திருக்கின்றன. அந்தந்த நாட்டின் இயற்க்கை அமைப்பு , தட்பவெட்ப நிலை, சுற்றுச் சார்பு மக்களின் பழக்க , வழக்கங்கள் ,
மனோபாவம் , சமயக்கொள்கை முதலியவற்றிற்கு ஏற்றபடி அழகுக் கலைகள் வெவ்வேறு விதமாக உருவடைந்திருக்கின்றன. எக்காரணங் களினால் தாம் அழகுக்கலைகள் எல்லாம் எல்லா நாட்டிலும் ஒரே விதமாக இல்லாமல் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு விதமாக உள்ளன.
அழகுக் கலைகளை கண்ணினால் கண்டும் , காதினால் கேட்டும், உள்ளத்தினால் உணர்ந்தும் மகிழ்கிறோம் . கண்ணால் கண்டு இன்புறத்தக்கது கட்டிடக்கலை . பருப்பொருளாக உள்ளபடியால் , கட்டிடத்தைத் தூரத்தில் இருந்தும் கண்டு களிக்கிறோம். இரண்டாவதாகிய
சிற்பக்கலை மனிதன் ,விலகு, பறவை , தாவரம் முதலான உலகத்திலுள்ள
இயற்கைப் பொருள்களின் வடிவத்தையும் , கற்பனையாகக் கற்ப்பித்து
அமைக்கப்பட்ட பொருள்களின் உருவத்தையும் அழகு பட அமைப்பது .
இந்தச் சிற்பக்கலை , கட்டிடக்கலையை விட நுட்பமானது . இதனையும் கண்ணால் கண்டு மகிழ்கிறோம் . மூன்றாவதாகிய ஓவியக்கலை , சிற்பக்கலையை விட நுட்பமானது . உலகத்தில் காணப்படுகிற எல்லாப்
பொருள்களின் உருவத்தையும் , உலகில் காணப்படாத கற்பனைப் பொருள்களின் வடிவத்தையும் பலவித நிறங்களினாலே அழகுபட எழுதப்படுகிற படங்களே ஓவியக்கலையாம். முற்காலத்தில் சுவர்களிலும் ,துணிகளிலும் ஓவியங்கள் எழுதப்பட்டன. படம் என்னும் சொல் படாம் (துணி) என்னும் சொல்லிலிருந்து உண்டாயிற்று . இதனையும் அருகில் இருந்து கண்ணால் கண்டு மகிழ்கிறோம் . நான்காவதாகிய இசைக் கலையைக் கண்ணால் காண முடியாது.அது காதினால் கேட்டு இன்புறத்தக்கது . ஐந்தாவதாகிய காவியக்கலை மேற்க்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது . ஏனென்றால் , இக்காவியக்கலையை
கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்க்கக்கூடுமாயினும் ,
கேட்பதனாலே மட்டும் மகிழ முடியாது. காவியக்கலையைத் துய்ப்பதற்கு
மன உணர்வு மிக முக்கியமானது. மனத்தினால் உணர்ந்து அறிவினால் இன்புற வேண்டும். ஆகையினாலே , காவியக்கலை , கலைகளில் சிறந்த நுண்கலை என்றும் , மென்கலை என்றும் கூறப்படுகிறது.இசைக்கலையோடு
தொடர்புடைய நடனம் , நாட்டியம் , கூத்து என்பனவும் காவியக்கலையுடன்
தொடர்புடைய நாடகமும் கண்ணால் கண்டு காதால் கேட்டும் மகிழத்தக்கன.
Q 95. உறுதிக்கூற்று (உ): கலைகளுக்கெல்லாம் கெடுமுடியாகத் திகழ்வது
ஓவியம் .
காரணம்(கா): மனத்தினால் உணர்ந்து அறிவினால் இன்புறப்பாலது அது.
இவற்றுள்:
1. (உ) சரி , (கா) சரி
2. (உ) சரியன்று , (கா) சரி
3. (உ) சரியன்று , (கா) சரியன்று
4. (உ) சரி , (கா) சரியன்று விடை: 3
Q 96. பொதுக்கலையினின்றும் வேறாய கலையின் ஒருபொருட் பொன்மொழிகள் :
1. நற்கலை
2. அழகுக்கலை
3. நறுங்கலை
4. கவின்கலை
இவற்றுள்:
1. 1, 2, 3 சரி
2. 1, 2, 4 சரி
3. 1, 2, 3, 4 சரி
4. 1, 3, 4 சரி விடை:2
Q 97. நிரல்படுத்துக: இன்கலைகள்
1. காவியம்
2. கட்டடம்
3. ஓவியம்
4. சிற்பம்
5. இசை
இவற்றுள்:
1. 2, 5, 1, 4, 3
2. 2, 4, 3, 5, 1
3. 2, 4, 1, 5, 3
4. 2, 1, 3, 5, 4 விடை: 2
Q 98. உறுதிக்கூற்று(உ): மனிதர்களுள் சிலர் அறிவு நிரம்பாத விலங்கு எனக்
கூறத்தக்கவர்கள்.
காரணம்(கா): அழகுக் கலைகளை அவர்கள் போற்றுகிறார்கள் .
இவற்றுள்:
1. (உ) சரியன்று , (கா) சரியன்று
2. (உ) சரியன்று, (கா) சரி
3. (உ) சரி, (கா) சரி
4. (உ) சரி , (கா) சரியன்று விடை: 4
Q 99. மனித நல்வாழ்விற்கு உதவும் தொழில்
1. நாடகம்
2. கூத்து
3. கலை
4. மென்கலை விடை: 3
Q 100. பொருத்துக :
(a ) நாட்டியம் (1) காட்சி
(b ) காவியம் (2) செவிப்புலன் இன்பம்
(c ) இசை (3) உள்ள உவகை
(d ) கட்டடம் (4) கட்புலன் , செவிப்புலன் இன்பம்
1. (a)-(4), (b)-(3), (c)-(2), (d)-(1)
2. (a)-(4), (b)-(2), (c)-(3), (d)-(1)
3. (a)-(4), (b)-(1), (c)-(2), (d)-(3)
4. (a)-(4), (b)-(3), (c)-(1), (d)-(2) விடை: 1.

Comments
Post a Comment