பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு "
1. நாலடியார்(நீதி நூல் ) 2.நான்மணிக்கடிகை(நீதி நூல்)
3. இன்னா நாற்பது(நீதி நூல்) 4. இனியவை நாற்பது(நீதி நூல்)
5. கார் நாற்பது(அக நூல் ) 6. களவழி நாற்பது (புற நூல்)
7. ஐந்திணை ஐம்பது(அக நூல்) 8. ஐந்திணை எழுபது(அக நூல்)
9. திணைமொழி ஐம்பது(அக நூல்) 10. திணைமாலை நூற்றைம்பது(அக நூல்) 11. திருக்குறள்(நீதி நூல் ) 12. திரிகடுகம்(நீதி நூல்)
13. ஆசாரக்கோவை(நீதி நூல்) 14. பழமொழி நானூறு (நீதி நூல்)
15. சிறுபஞ்சமூலம் (நீதி நூல் ) 16. கைந்நிலை(அக நூல்)
17. முதுமொழிக்காஞ்சி (நீதி நூல்) 18. ஏலாதி (நீதி நூல்).
குறிப்பு : பதினெண் கீக்கணக்கு நூல்களில் "இன்னிலை " சேர்க்கப்
பட்டுள்ளதா இல்லையா என்பது ஒரு சர்ச்சசைக்கு உரிய விசயமாக உள்ளது .
"இன்னிலை" யை சேர்த்தால் ,"கைந்நிலை " சேராது . கைந்நிலையை
சேர்த்தால் இன்னிலை சேராது. ஆனால் மேற்கூறிய நூற்பா
"இன்னிலைய காஞ்சியோ டேலாதி " என குறிப்பதால் இன்னிலைதான்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் சேரும் என்று ஒருசாராரும்,
அதே நூற்பாவில் "கைந்நிலைய வாக்குகீழ்க் கணக்கு " என வருதலால்
கைந்நிலை தான் வரும் என மறு சாராரும் கூறுகின்றனர். ஆனால் எவரும்
இவை சங்க இலக்கியம் இல்லை என சொல்லவில்லை .
"இன்னிலைய காஞ்சியோடு " என்பதை 'இனிய நிலையையுடைய
காஞ்சி' என்று காஞ்சிக்கு அடைமொழியாக ஏற்கவேண்டும் என கூறு
கிற்றனர் அறிஞர் பெருமக்கள். மறுசாரார் இன்னிலை யையும் சேர்த்து
கூறவேண்டும் என்கிறார்கள்.
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்
நீதிநூல்கள் 11 ,
அகநூல்கள் 5,
புற நூல்கள் 1(இன்னிலையை சேர்த்தால் புறநூல் 2)
* சங்கம் மருவிய கால இலக்கியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
* நான்காம் தமிழ்ச் சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
கி.பி.470 இல்
* நான்காம் தமிழ்ச்சங்கம் யாரால் தொடங்கப்பட்டது ?
வச்சிர நந்தி
* வச்சிர நந்தி எந்த சமயத்தினை சார்ந்தவர் ?
சமணம்
* வச்சிர நந்தியால் ஆரம்பிக்கப்பட்ட சங்கத்தின் பெயர் என்ன?
திராவிட சங்கம்
* திராவிட சங்கத்து நூல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ? பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயரால் வழங்கப்படும் நூல்கள் யாவை ?
திரிகடுகம், சிறுபஞ்ச மூலம் , ஏலாதி
* கீழ்க்கணக்கு நூல்களின் காலம் என்ன?
கி.பி.100 - 700
* இரட்டை அற நூல்கள் என்று அழைக்கப்படுவது?
இன்னா நாற்பது (கபிலர் )
இனியவை நாற்பது (பூதஞ்சேந்தனார்)
* மேற்கணக்கு நூல்களின் மரபு என்ன?
வெண்பா ,ஆசிரியபா , கலிப்பா, வஞ்சிப்பா ,மருட்பா என்னும் ஐந்து
பாக்களிலும் இலக்கண மரபுப்படி 50 முதல் 500 வரையுள்ள செய்யுட்களை பாடி அமைப்பது .
*கீழ்க்கணக்கு நூல்களின் மரபு என்ன?
வெண்பா யாப்பில் வந்து, ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளைக் கொண்டு வரும். அறம் ,பொருள், இன்பம் , என்னும் மூன்றையோ அல்லது ஒன்றையோ கொண்டு வருவது கீழ்க்கணக்கு .
* மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களுக்கு இலக்கண நூல் எது?
பன்னிரு பாட்டியல்
* தொல்காப்பியர் கூறும் 'அம்மை ' என்னும் வனப்பு பெற்ற நூற்கள்
நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது
* இருண்ட காலத்து விருத்தங்கள் - கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் ஆகிய மூன்றும்.
* இன்னிலை பாடியவர் - பொய்கையார்
* இன்னிலையை முதலில் பதித்தவர் - வ.உ.சி.
* இன்னிலை புறம் பற்றிய நூல் ஆகும் .
* இன்னிலை 45 பாடல்களைக் கொண்டது. ,அறப்பால் பத்தும் ,பொருட்பால் ஒன்பதும் , இன்பப்பால் பன்னிரண்டும் , வீட்டிலக்கப்பால் ஆக மொத்தம் 45 வெண் பாக்களைக் கொண்டது. (கடவுள் வாழ்த்து நீங்கலாக )
* இன்னிலையின் கடவுள் வாழ்த்து பாடியது
பாரதம் பாடிய பெருந்தேவனார்
* இன்னிலையை தொகுத்தவர் - மதுரையாசிரியர் பூதனார்
* நாலடியாரை எழுதியவர்கள் - 400 சமண முனிவர்கள்.
* வேளாண் வேதம் என்று அழைக்கப்படுவது
நாலடியார்
* திருக்குறளுக்கு இணையாக பேசப்படும் கீழ்க்கணக்கு நூல்
நாலடியார்
* முத்தரையர் என்னும் பிரிவினரைப் பற்றிக் கூறும் நூல்
நாலடியார்
* நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
ஜி .யூ .போப்
* 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' - இக்கூற்று பெருமை பாடும் நூல்கள் எவை?
நாலடியார், திருக்குறள் .
* நாலடியாரைத் தொகுத்தவர் யாராக இருக்கலாம் என்று இலக்கியங்கள்
கூறுகின்றன? - பதுமனார்
* நாலடியார் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது?
அறத்துப்பால் 13 அதிகாரங்கள்
பொருட்பால் 24 அதிகாரங்கள்
காமத்துப்பால் 3 அதிகாரங்கள்
* "பொன்கலத்துப் பெய்த புலிஉகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார்கைத்து
உண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போல் இளைஞர்
மாட்டு எக்காலத்தானும் இனிது " -- நாலடியார்
* "பெரியவர் கேண்மை மறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம் போல் வைகலும் தேயும்
தானே சிறியார் தொடர்பு " - நாலடியார்
* 'விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின் முன் நில்லாதாம்
பாவம் ' இடம்பெறுவது - நாலடியார்
* நான்மணிக்கடிகையை இயற்றியவர் யார்?
விளம்பி நாகனார்
* நான்மணிக்கடிகையின் மொத்தப் பாடல் எண்ணிக்கை -103 ( இந்நூலின் இரண்டு கடவுள் வாழ்த்தினையும் சேர்த்து )
* நான்மணிக்கடிகையின் கடவுள்வாழ்த்து யாரைப்பற்றியது
திருமால்
* விளம்பி நாயனாரின் சமயம் - வைணவம்
* "கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் ; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும் ; பெருங் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,
நல் ஆள் பிறக்கும் குடி ?" -இப்பாடல் இடம்பெறுவது - நான்மணிக்கடிகை
* "அலைக்குப்பாழ் மூத்தோரை இன்மை , தனக்குப்பாழ் கற்றறிவில்லா
உடம்பு " இடம்பெறுவது - நான்மணிக்கடிகை
* இன்னா நாற்பது ஆசிரியர் - கபிலர்
* இன்னா நாற்பது பாவகை - வெண்பாக்கள்
* இன்னா நாற்பது மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது ?
40 + 1 ( கடவுள் வாழ்த்துப் பாடல் உட்பட 41 ) பாடல்கள்
* இன்னா நாற்பது எதைப் பற்றி கூறுகிறது ?
164 கூடாத செயல்கள் எவை என்பது பற்றி கூறுகிறது
* இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்தில் வணங்கப்படும் தெய்வங்கள் -
சிவன், பலராமன், மாயோன், முருகன்
* "பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதமை இன்னா " -பாடல் வரி இடம்
பெறும் நூல் ? - இன்னா நாற்பது
* இனியவை நாற்பதின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்
* "சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரை சேர்தல் மிகமான முன்னினிதே
எள்துணை யானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது " இடம்பெறுவது - இனியவை நாற்பது
* இனியவை நாற்பதில் இடம்பெறும் கருத்துக்கள் - 124
* இனியவை நாற்பது பாடல்கள் எந்த பாவகையை சார்ந்தது ?
'ஊரும் கலிமா ' எனத்தொடங்கும்(8) பாடல் மட்டும் பஃறொடை வெண்பா .ஏனைய அனைத்தும் இன்னிசை வெண்பா.
* நான்கு பாடல்களில்(1,3,4,5) நான்கு பொருட்களையும் , மீதமுள்ள பாடல்கள்
அனைத்தும் மூன்று பொருட்களையும் சுட்டும் நூல் - இனியவை நாற்பது
* இனியவை நாற்பதில் கடவுள் வாழ்த்து பாடலில் இடம்பெறும் கடவுள்கள் -
சிவன்,மால், பிரம்மன்
* "குழலி தளர்நடை காண்டல் இனிதே ;
அவர் மழலை கேட்டல் அமிழ்தினும் இனிதே " - இடம்பெறுவது
இனியவை நாற்பது
* கார்நாற்பதின் ஆசிரியர் யார் ?
மதுரை கண்ணன் கூத்தனார்
* கார்நாற்பது நூலிலுள்ள பாடல்கள் எத்திணையை சார்ந்தவை ?
முல்லைத்திணை
* மாயோனையும் பலராமனையும் வேள்வித்தீயையும் பற்றி குறிப்பிடும்
நூல் - கார்நாற்பது
* கார்த்திகையில் விளக்கேற்றும் வழக்கம் மக்களிடையே இருந்தது என்பதை குறிக்கும் நூல் - கார்நாற்பது
* " நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை " பாடல் இடம்பெறுவது - கார்நாற்பது
* களவழி நாற்பதின் ஆசிரியர் - பொய்கையார்
* பதினெண் கீழ்க்கணக்கில் சோழனும் அவனது படைகளும் செய்த வீரப்போர் பற்றி கூறும் ஒரே நூல் -களவழி நாற்பது
* களவழி நாற்பதின் வரலாற்று செய்தி என்ன?
சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும் ,சேரமான் கணைக்கால்
இரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் நடைபெற்ற போரைப் பற்றியும் , அதில் சோழன் வெற்றி பெற்றதையும் கூறுகிறது.
* நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது
- ஏரோர் களவழி
* பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது - தேரோர் களவழி
* சோழ மன்னன் செங்கணானின் போர்த்திறத்தை பாடி பரிசாக தனது நண்பனான சேர மன்னனை(கணைக்கால் இரும்பொறை ) சிறையில் இருந்து மீட்டவர் - பொய்கையார் .
* சோழனை "புனல் நாடன் , நீர் நாடன், காவேரி நாடன், காவேரி நீர் நாடன்,
செங்கண்மால், செங்கண் சினமால் , செம்பியன் , புனை கழற்கால்,
கொடித்திண்தேர் செம்பியன்,திண்தேர் செம்பியன்,சேய் , சேறு மொய்ம்பின் சேய் , பைம்பூண் சேய்" என்று குறித்தவர் - பொய்கையார்
* ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் - மாறன் பொறையனார்
* ஐந்திணை ஐம்பது எதைப் பற்றியது ?
ஐந்து திணைகளைப் பற்றியது
* ஐந்திணை ஐம்பது பாடல் வைப்பு முறை எவ்வாறு அமைந்துள்ளது?
முல்லை, குறிஞ்சி ,மருதம்,பாலை, நெய்தல்.
* "சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி " இப்பாடல் இடம்பெறுவது - ஐந்திணை ஐம்பது
* "திருவொடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர் உருவொடுங்கும்
உள்ளுருகி நின்று " இவ்வரிகள் இடம்பெறுவது - ஐந்திணை ஐம்பது
* ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
* ஐந்திணை எழுபதின் பாடல் பிரிவுகள் எவ்வாறு அமைந்துள்ளது?
திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் 70 பாடல்களைக் கொண்டது
* ஐந்திணை எழுபதில் வணக்கம் பெறும் கடவுள் யார்?
விநாயகர்
* பகைவரை அழித்த வீரர்களுக்கு பாலை நிலத்தில் கல் நாட்டுதல் வழக்கம்
என்பதைக் குறிக்கும் நூல்? - ஐந்திணை எழுபது
* மனையறம் பூண்ட காதலர் தம் புதல்வனுக்கு ஐம்படைத்தாலி அணிவித்து
பெயர்சூட்டி மகிழ்தல் , மணம் புரியும் காலத்தில் தலைவன் கூறும்
உறுதிமொழிகளைத் தலைவி ஏட்டில் எழுதிப்பெறுதல் , பரத்தையிற்
பிரிந்த தலைவன் தலைவியின் ஊடலைத்தணிக்க பாணனைத் தூது
அனுப்புதல் போன்ற வழக்கங்களை அறிய உதவும் நூல் -
ஐந்திணை எழுபது
* "இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானும் அவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும் " இப்பாடல் இடம்பெறுவது ?
ஐந்திணை எழுபது
* திணைமொழி ஐம்பதின் ஆசிரியர் யார்?
கண்ணன் சேந்தனார்
* திணைமொழி ஐம்பதில் பாடல் வைப்புமுறை எவ்வாறு இருக்கிறது?
குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம் ,நெய்தல்
* "யாழும் குழலும் முழவும் இயைந்தென , வீழும் அருவி விறன் மலை
நன்னாட " இடம் பெறுவது ?
திணைமொழி ஐம்பது
* திணைமொழி நூற்றைம்பதின் ஆசிரியர் - கணிமேதாவியார்
* திணைமாலை நூற்றைம்பதின் பாடல்கள் - 153 (கடவுள் வாழ்த்துடன் )
* கணிமேதாவியார் எந்த சமயத்தினை சார்ந்தவர் ?
சமணம்
* "பாலையாழ்ப் பாண்மகனே பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு ." இப்பாடல் இடம்பெறுவது
திணைமாலை நூற்றைம்பது
* முப்பால், உத்தர வேதம் ,தெய்வ நூல், பொதுமறை, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொய்யா மொழி என்றெல்லாம் அழைக்கப்படுவது எது ?
திருக்குறள்
* பதின்மர் உரை எழுதிய ஒரே நூல் - திருக்குறள்
* திருக்குறளுக்கு சிறப்பான உரை யாருடையது ? - பரிமேலழகர்
* திருக்குறளின் அதிகாரங்கள் :
அறத்துப்பால் 38
பொருட்பால் 70
காமத்துப்பால் 25
-------
மொத்தம் 133 அதிகாரங்கள்
* "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறிந்த குறள் " யாருடைய கூற்று ? - இடைக்காடர்
* "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள் " இது
யாருடைய கூற்று ? - ஓளவையார்
* "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு" என்று பாடியவர்? - பாரதியார்
* நாயனார் , தேவர், முதற்பாவலர் , தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி , செந்நாப்புலவர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
திருவள்ளுவர்
* திருக்குறள் முதன் முதலில் எப்போது அச்சிடப்பட்டது ?
1812 இல்
* திருக்குறள் ஆங்கிலத்தில் எப்பொழுது வெளியிடப்பட்டது?
1840 இல்
* திருவள்ளுவர் ஆண்டு என்பது - பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
* 1730 இல் ஐரோப்பிய மக்களுக்கு முதலில் திருக்குறளை அறிமுகப் படுத்தியவர் யார்?
வீரமாமுனிவர்
* 1794 இல் முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ?
கிண்டேர்ஸ்லே
* உலகிலே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில்
மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது.
* திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது? - 107 மொழிகளில்
* எந்தெந்த இந்திய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
குஜராத்தி, ஹிந்தி , வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி,மலையாளம், மராத்தி , மணிப்புரியம் , ஒரியா,பஞ்சாபி, இராஜஸ்தானி , சமஸ்கிருதம், சௌராட்டிர மொழி,தெலுங்கு .
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - 9
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் -
தஞ்சை ஞானப்பிரகாசர்
* திருக்குறளில் உள்ள சொற்கள் - 14000
* திருக்குறளில் இடம் பெரும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை.
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப் பழம்
* திருக்குறளில் இடம் பெரும் ஒரே விதை - குன்றிமணி
* திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ?
ஜி .யு .போப்
* திருக்குறளின் உரையாசிரியர்களில் 10 வது யார்?
பரிமேலழகர்
* திருக்குறள் நரிக்குறவர்கள் மொழியான வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது .
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர் .
* திரிகடுகத்தின் ஆசிரியர் - நல்லாதனார்
* திரிகடுகம் என்பது - சுக்கு, மிளகு, திப்பிலி.
* திரிகடுகத்தின் பாடல்களில் - மூன்று உறுதி பொருட்களை கூறுகின்றது .
* திரிகடுகம் 101 வெண்பாக்களைக் கொண்டது.
* "உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் முழுமக்கள் காதலவை "
இடம்பெறுவது ? - திரிகடுகம்
* ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்? - வண்கயத்தூரைச் சார்ந்த பெருவாயின் முள்ளியார்.
* ஆசாரக்கோவை என்பது - உள்ளும் புறமும் தூய்மை
* பெருவாயின் முள்ளியார் சார்ந்த சமயம் - சைவம்
* ஆசாரக்கோவையின் மொத்தப் பாடல்கள் - 101 பாடல்கள்
* பழமொழி நானூறின் ஆசிரியர் யார்? - முன்றுறை அரையனார்
* முன்றுறை அறையனாரின் சமயம் - சமணம்
* 'கற்றலின் கேட்டலே நன்றே '
'பாம்பின் கால் பாம்பு அறியும் '
'நுணலும் தன் வாயால் கெடும் '
'திங்களை நாய் குரைத்தற்று '
'முள்ளினால் முள் களையுமாறு '
'இறைத்தொறும் ஊறும் கிணறு ' -இவை அனைத்தும் பழமொழி
நானூறின் வரிகள் .
* பழமொழி நானூறில் காணப்படு வரலாற்று குறிப்புகள் :
தூங்கும் எயிலும் தொலைத்தலால் ( தூங்கெயில் எறிந்த தொடித்தோட்
செம்பியனைக் குறித்தது)
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (மனு நீதி
கண்ட சோழன் )
தவற்றை நினைத்துத்தன் கைக்குறைத்தான் தென்னவனும் (பொற்கைப்
பாண்டியன் )
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (குறுநில வள்ளல்
பாரி,பேகன் )
பாரி மடமகள் பாண்மகற்கு (பாரியின் மகள்)
நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (கரிகால் சோழன்)
சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த இளம்சேட் சென்னி சோழன் மகனாகிய
கரிகால் சோழன் )
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (தம் புகழைப் பாடிய
கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன் )
* பழமொழி நானூறில் புராணக் குறிப்புகள் :
பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து - இராமாயணம்
அரக்கில்லுள்பொய்யற்ற ஐவரும் போயினார் - பாரதம்
பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா - பாரதம்
ஆ ஆம் எனக்கெளி தென்று உலகம் ஆண்டவன் - மாவலி
உலகலந்தாவிய அண்ணலே - உலகம் அளந்த வாமனன்
* சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் யார்? - காரியாசான்
* சிறு பஞ்ச மூலத்தில் அடங்கியுள்ள பொருட்கள் - கண்டன் கத்திரி , சிறுவழுதுணை , சிறுமல்லி, பெருமல்லி,நெருஞ்சில் .
* சிறு பஞ்சமூலம் - 97 செய்யுள்கள், 4 அடிகள் ,5 விடயங்கள் கொண்டது
* "மனிதன் சாதாரணமாக மயங்கும் அலகுகளை வர்ணித்து, பின் அவற்றை
விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது" என்று கூறுவது
சிறுபஞ்ச மூலம்
* முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் யார்? - மதுரை கூடலூர் கிழார்
* முதுமொழிக்காஞ்சியின் படற்பிரிவு எவ்வாறு உள்ளது ? -
10 பாக்கள் கொண்ட 10 அதிகாரங்கள்
* ஒவ்வொரு அதிகாரத்திலும் 'ஆர்கலியுலகத்து ' எனத் தொடங்கும் நூல்
முதுமொழிக்காஞ்சி
* முதுமொழிக்காஞ்சில் இடம் பெற்றுள்ள பத்து பத்துகள் யாவை?
சிறந்த பத்து, அறிவுப்பத்து , பழியாப்பத்து , துவ்வாப்பத்து ,
அல்ல பத்து, இல்லைப்பாத்து , பொய்ப்பத்து , எளிய பத்து, நல்கூர்ந்த
பத்து, தண்டாப் பத்து.
* மூதுரை, முதுசொல் எனப் பொருள் தருவது - முதுமொழிக்காஞ்சி
* காஞ்சி என்பது காஞ்சித் திணையில் தொல்காப்பியர் காட்டும் ஒரு துறை -
'கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முறைமை '
* ஏலாதியின் ஆசிரியர் யார்? - கணிமேதாவியார்
* ஏலாதி எதனால் ஆனது - ஏலம் , இலவங்கம், பட்டை,சிறுநாவற்ப்பூ ,
சுக்கு,மிளகு, திப்பிலி ஆகிய அறுவகை மருந்தினால் ஆனது.
* நீதி நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூல் - ஏலாதி
* 'கொல்லான் கொலைபுரியான் பிறர் மனை மேல் செல்லான் சிறியார்
இனம் சேரான் ' இடம் பெறுவது - ஏலாதி
* ஏலாதியில் இடம் பெற்றுள்ள அறக்கருத்துக்கள் யாவை ?
கொல்லாமை, புலாலுண்ணாமை, எளியோர்க்கு உணவு உடை வழங்குதல் .
* கணிமேதாவியாரின் சமயம் - சமணம்
* ஏலாதியில் 81 பாடல்கள் உள்ளன.
* "இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு" இடம்பெறுவது - ஏலாதி
* கைந்நிலையின் ஆசிரியர் யார் ? - புல்லங்காடனார்
* பாடல்களின் எண்ணிக்கை - திணைக்கு 12 ஆக மொத்தம் 60.
* கை என்பதன் பொருள் என்ன ? - ஒழுக்கம்
* கைந்நிலையில் கூறப்பட்டுள்ள விசயங்கள் என்ன?
அரிய மலைக்காட்சிகள், பாலை நிலா வெம்மை , தலைவன் தலைவி காதல் நிலை .
* "வெந்த புனத்திற்கு வாசமுடைத்தாகச்
சந்தன மேந்தி யருவி கொணர்ந்திடூஉம்
வஞ்சமலை நாடன்" - கைந்நிலை
* கைந்நிலை பா வகை - வெண்பா
* 'ஐந்திணை அறுபது ' என்றும் கூறப்படுவது - கைந்நிலை
* கைந்நிலையில் உள்ள வாடா சொற்கள் யாவை?
ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்தரம் போன்றன .
- தேவி நாகராஜன்.

மிகவும் பயனுள்ளது
ReplyDeleteஅருமை.நன்றி
ReplyDelete