பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1

பழந்தமிழ் இலக்கியங்கள்         எட்டுத்தொகை                                                       பகுதி 1

*   மொத்த பாடல்களின் எண்ணிக்கை - ஆசிரியர் பெயர் கண்ட  பாடல்களின் எண்ணிக்கை  2279 , ஆசிரியர் பெயர்       காணாத பாடல்களின் எண்ணிக்கை 102,  மொத்தம் 2381.

*  மொத்தம் பாடிய புலவர்கள்473 பேர்

➤  பதினெண் மேல்கணக்கு நூல்கள்
       🔼 எட்டுத்தொகை , 🔼பத்துப்பாட்டு
எட்டுத்தொகை நூல்கள் :
         "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 
          ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 
          கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் 
          என இத்திறத்த எட்டுத்தொகை. "
அகம்  பற்றியது --- நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு , கலித்தொகை , அகநானூறு. 
புறம் பற்றியது ---  பதிற்றுப்பத்து , புறநானூறு.  
அகம் புறம் இரண்டும் பற்றியது ---  பரிபாடல் .* நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்கள் -
                      கபிலர் (235 பாடல்கள் )
                      அம்மூவனார் (127 பாடல்கள் )
                      ஓரம்போகியார் (110 பாடல்கள் )
                      பேயனார் (105 பாடல்கள் )
                      ஓதலாந்தையார் (103 பாடல்கள் )

*  உறையூரில் "அறங்கூறு அவையம் " இருந்ததாகக் கூறும் இலக்கிய                       நூல்கள் ---  நற்றிணை , புறநானூறு 
*  அரசர்களுக்கு இன்றியமையாத வருவாய் எவை எவை --- நிலவரி , உல்கு            (சுங்கவரி ), திறைப்பணம் 
 *  பழங்காலத்தில் அரசனுக்கு உதவிய இரு பெரும் குழுக்கள் ---                                   ஐம்பெருங்குழு, எண்பேராலயம் 
 ஐம்பெருங்குழுவின் உறுப்பினர்கள் ---  அமைச்சர், புரோகிதர்,                              தானைத்தலைவர், தூதுவர், ஒற்றர்  
*  எண்பேராலயத்தில் இடம் பெறுபவர்கள் ---  கரணத்தலைவர்,                                  கருமக்காரர், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர் , நகர மாந்தர்,                          படைத்தலைவர், யானை வீரர், இவுளிமறவர் 
*  வெங்கதிர்க்கனலி (புறநானூறு )ல் கனலி எது  --  சூரியன்
நல்லங்காடி --- காலைநேர கடைவீதி
    அல்லங்காடி ---  மாலைநேர கடைவீதி
    வளநாடு          ----  வருவாய் மாவட்ட நிர்வாகம்
    அம்பலம்         ---  மூத்தோர்களின் சபை
    அவனம்           ---  கடைவீதிக்கான இடம் 
*  சேரர்கள் எந்த பூ மாலையை அணிந்தனர்   --  பனம் பூ 

*  "தலைக்கோல்" என்ற பட்டம் யாருக்கு கொடுக்கப்படும் ?
             ஆடல் மகளிர்
*  சங்க காலத்தில் வழிபாட்டு முறைகள் எதன் அடிப்படையில் அமைந்தது ?
              திணை 
நார்த்த மலைக் கோவில் சுவர்களில் யார் கால ஓவியங்கள் உள்ளன ?
             சோழர்  
 குடவோலை முறை பற்றி  கூறும் கல்வெட்டு   ---  உத்திரமேரூர் 
*  சேயோன்  ---- முருகன் 
*   கணிகையர் எதில் சிறந்து விளங்கினர்?
         நடனம் 
*  யார் காலத்து சுவர்   ஓவியத்தை  சித்தன்னவாசல் குடைவரைக்                              கோவில்களில் காணலாம் ?
           ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர் 
*  உமணர்   என்பவர் ---  உப்பு விற்பவர்
*  செறுத்த செய்யுள்  செந்நாவின்  வெறுத்த வேள்வி விளங்கு புகழ் --- கபிலர் 
*  சங்க   இலக்கியத்தில் மிகுதியான பாடல்களைப் பாடிய புலவர்   --- கபிலர் 
*  அலர்ப்புலவர் ---  உலோச்சனார் 
முல்லைப் புலவர் ---  இடைக்காடர் 
*  உடன்போக்கு துறையை அதிகமாகப் பாடியவர் ---  வெள்ளிவீதியார் 
*  நலங்கிள்ளி , நெடுங்கிள்ளி இடையே சமாதானம் செய்தவர் --                                      கோவூர்கிழார் 
*  பதிக அமைப்பு கொண்டது --  பதிற்றுப்பத்து 
*  சங்க நூல்களுக்கு வசனம் எழுதியவர் ---  ந. சி .கந்தையா பிள்ளை
*  அகமா புறமா ? என்னும் விவாதத்திற்குரிய நூல் ?   நெடுநல்வாடை 
*  வரலாற்று செய்திகளை தம் பாடல்களில் அதிகம் குறிப்பிடும் புலவர் ---
          மாமூலனார் 
*   எட்டுத்தொகையில் பழைய உரை நூல் ?
       நற்றிணை   
"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் 
      நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் "    ---  நற்றிணை
"  கடனறி மன்னர் குடை நிழற் போலப் 
     பெருந்தண்ணென்ற  மரநிழல் "   -- நற்றிணை
*  " சாதல் அஞ்சேன்   அஞ்சுவல் சாவில் 
     பிறப்புப் பிறிது  ஆகுவது  ஆயின்  மறக்குவேன் கொல்லேன் காதலன்          எனவே "           ---  நற்றிணை
 "அம்ம வாழி தோழி காதலர் 
      நிலம் புடை  பெயர்வதாயினும் கூறிய 
       சொல் புடைபெயர்தலோ இலரே "   ---  நற்றிணை
*  "நீரின்றமையா உலகு "   ---  நற்றிணை
*   உரையாசிரியர்களால் அதிகம்   மேற்கோள் காட்டப்படும் சங்க நூல் ?
              குறுந்தொகை  
*  " கொங்கு தேர் வாழ்க்கை " எனும் குறுந்தொகை பாடலை                                             சிவபெருமானை    நோக்கிப் பாடியவர்   -- இறையனார்  (நக்கீரர் )
*  நற்றிணைக்கு முதலில் உரை எழுதியவர் --  பின்னந்தூர் நாராயண சாமி
*   காவிதி , எட்டி யாருக்கு கொடுக்கப்படும் பட்டம்  ---  வணிகர் 
*  எட்டுத்தொகையில்  காலத்தால் முந்தியது   --  புறநானூறு 
* " கையில்  ஊமன் கண்ணில் காக்கும்  வெண்ணெய் உணங்கல் போல் "
     யாருடைய வரிகள் ---  வெள்ளிவீதியார் 
 "விளைக வயலே வருக இரவலர் "  யாருடைய வரிகள்  --- ஓரம்போகியார் 
*   இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் ?     --- ஐங்குறுநூறு 
*  குமட்டூர் கண்ணன் பாடிய பத்து   --- இரண்டாம்  பத்து
ஆறாம்  பத்தின் பாட்டுடைத்தலைவன்  --ஆடுகோட்பாட்டுச்  சேரலாதன் 
*   அந்துவன் சேரல்  இரும்பொறை வழிவந்த சேர  மன்னன்   --                                        செல்வக்கடுங்கோ வாழியாதன் 
*  சங்க நூல்களில் அனைத்து பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற நூல் ?
       பதிற்றுப்பத்து  
*  தொல்காப்பியர் பரிபாட்டு எப்பொருளில் வரும் என்கிறார் ?
     அகப்பொருள் 
*  போந்தை , ஆர் என்பது மன்னர்களின் அடையாளப்பூ
*  "பொருட்கலவை  நூல் "    என்று அழைக்கப்படுவது
      பரிபாடல் 
*  தேய்புரி பழங்கயிற்றனார் பாடிய பாடல் இடம்பெறும் நூல் ?
      நற்றிணை 
*  கலித்தொகையின்  பாடல்   பயின்று வரும் ஓசை ?
     துள்ளல் ஓசை
*  தைநீராடல் பற்றிய செய்தி கூறும் எட்டுத்தொகை நூல் ?
    கலித்தொகை 
*  பரிபாடலில் அகம்பற்றிய பாடல்கள் அடங்கிய பகுதி ?
    வையை பற்றியன 
*  தமிழர்களின் வரலாற்று களஞ்சியம் ?
     புறநானூறு
*  தஞ்சையில் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும் அழகிய பாடல்களை
    உடையது ?        ----   கலித்தொகை 
*  பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் எது ?
      மதுரை 
*  பிசிராந்தையாருடன் நட்பு பூண்டவர் ?
     கோப்பெருஞ்சோழன் 
*  புலணுக்கற்ற அந்தணாளன் என்று கபிலரைப் போற்றியவர் ?
    நப்பசலையார்
*  பத்துப்பாட்டில் நான்காம் பத்தினை ஒரு வகையில் ஒத்தமைந்த                            எட்டுத்தொகை  நூல் எது ?
     ஐங்குறுநூறு 
*  "தேன்மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு .....உவலை கூவர் கீழ்                          மனுண்டெஞ்சிய  கலுழி நீரே "  யாருடைய பாடல் வரிகள்
     கபிலர் 
*  கண்ணகியின் வாழ்க்கையோடு ஒத்த திருமா உண்ணியின் வரலாற்றைத்
    தெரிவிப்பது       ----நற்றிணை 
*  எட்டுத்தொகையில் முதலில் தொகுக்கப்பட்டது எது ?
     குறுந்தொகை 
*  உள்ளது சிதைப்போர் ஊரெனப்படார் எனக் கூறிய புலவர்
    பெருங்கடுங்கோ
*  பங்குனி விழா , கார்த்திகை விளக்கு , பிள்ளைகளுக்கு ஐம்படைத்தாலி
    அணிவித்தல் போன்ற செய்தியை கூறும் தொகைநூல் ?
     அகநானூறு 
*  ஓரங்க நாடகம் போல் பாடல்கள் அமைந்த நூல் ?
    கலித்தொகை 
*  வழக்கில் இல்லாத பழஞ்சொற்கள்  மிகுதியாக பெற்றுள்ள சங்க நூல்
      பதிற்றுப்பத்து 
*  நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவுப் பகுதியை              பரிசாகப் பெற்றவர்
     கபிலர் 
*  13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட எட்டுத்தொகை           நூல்    ----    அகநானூறு 
*  10 வகை ஆடைகள், 28 வகை அணிகள் , 30 வகைப் படைக்கருவிகள், 67                வகை உணவுகள் போன்றவற்றை குறிப்பிடும் நூல் ?
    புறநானூறு 
*  பெருந்தொகை நானூறு, நெடுந்தொகை  என்று அழைக்கபடும் நூல் ---                அகநானூறு
*  ஓரேருழவனார் பாடிய பாடல் இடம்பெற்றுள்ள நூல்   -- குறுந்தொகை 
*  "அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை " எனக் குறிப்பிடுவது
      அகநானூற்று உரைப்பாயிரம் 
*  பெண் கொலை புரிந்த நன்னன் பற்றிக் குறிப்பிடும் நூல்  --  குறுந்தொகை 
*  கொல்லித் தெய்வம் பற்றிக் குறிப்பிடும் நூல்  -- குறுந்தொகை
*  சோனை நதிக்கரையில் அமைந்துள்ள பாடலிபுத்திரம் பற்றி குறிப்பிடும்           புலவர்  ---  மோசி கீரனார் 
*  ஐங்குறுநூற்றை முதன் முதலில் உரையுடன் வெளியிட்டவர் -- உ .வே .சா 
*  2,8,12,18 என எண் கொண்ட அகநானூற்றுப்  பாடல்கள் -- குறிஞ்சித் திணை
*  4,14,24,34 என நான்காம் எண்ணில் வரும் அகநானூற்றுப் பாடல்கள்
    முல்லைத்திணை
*  6,16,26,36 எண் கொண்ட பாடல்கள் --- மருதத்திணை 
*  10,20,30, எண் கொண்ட பாடல்கள் ---  நெய்தல் திணை
* ஒற்றைப் படை எண் கொண்ட அனைத்துப் பாடல்களும் ---பாலைத்திணை
*  அகநானூற்றில் 1-120 பாடல்கள் --- களிற்றியானை நிரை
*  அகநானூற்றில் இரண்டாவது 180 பாடல்கள் (121-300) எவ்வாறு அழைக்கப்           படுகின்றன?     ---மணிமிடைப்பவளம் 
*  அகநானூற்றில் இறுதி 100 பாடல்கள் (301-400)எவ்வாறு                                                     அழைக்கப்படுகின்றன ?    -- நித்திலக்கோவை
*  நந்தர்கள் தங்கள் செல்வத்தை மறைத்தல், மௌரியர் தமிழகத்தில்                      படையெடுப்பு ,திருமணவிழா ,முசிறி துறைமுகம் குறிப்பு போன்றன                   கூறும்   நூல்   ---  புறநானூறு 
*  கலித்தொகை முழுமைக்கும் உரை எழுதியவர் --   நச்சினார்க்கினியர் 
*  குறிஞ்சிக்கலி  --- கபிலர்
*  முல்லைக்கலி  -- சோழன் நல்லுருத்திரன் 
*  மருதக்கலி  --  மருதநில நாகனார் 
*  நெய்தல் கலி  --  நல்லந்துவனார் 
*  பாலைக்கலி   --- பெருங்கடுங்கோ
*  கலித்தொகையில் அரசரால் பாடப்பட்டவை  --
     முல்லைக்கலி    -- சோழன் நல்லுருத்திரன்
      பாலைக்கலி   --  பெருங்கடுங்கோ
* ஏறுதழுவுதலை எடுத்துரைக்கும் கலிப்பா பாடல்  -- முல்லைக்கலி 
*  இதிகாச புராணங்கள் அதிகம் இடம் பெறுவது  --  கலித்தொகை
*  "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல் "   இடம் பெறுவது --
      கலித்தொகை
*  இரும்புக்கடலை என்று அழைக்கப்படுவது ---பதிற்றுப்பத்து 
*  பதிற்றுப்பத்தில் கிடைக்காத இரு பகுதிகள் ---முதல் பத்து , கடைசி பத்து 
*  தொல்காப்பியர் தொடாத அந்தாதித் தொடை எட்டுத் தொகையில்                      எப்பாட்டில் அமைந்துள்ளது?
    பதிற்றுப்பத்து  நான்காம் பத்தில்
*  பாடிய புலவர்க்கு 500 ஊர் அளித்த மன்னன் -  இமயவரம்பன் 
*  பாடிய புலவர்க்கு தன் மகனை வழங்கிய மன்னன் - நெடுஞ்சேரலாதன் 
     மகன் செங்குட்டுவன் 
*  கபிலருக்கு குன்றில் ஏறி கண்ணில் பட்ட ஊரெல்லாம் பரிசாக                                 கொடுத்தவன் --- செல்வக்கொடுங்கோ வாழியாதன்
*  தன்  அரசவையையே புலவர்க்கு அளித்த மன்னன்
     - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 
*  கடலில் மறைந்த பஃறுளி ஆறு , நடுகல் வைத்தல் ,  இறந்தவரைத்
   தாழியில் புதைத்தல் , உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றை கூறும்                            எட்டுத்தொகை நூல்   --புறநானூறு
*  நந்தா விளக்கம் என்று அழைக்கப்படுவது --  புறநானூறு 
*  பண் அமைந்த எட்டுத்தொகை நூல் எது ?   -- பரிபாடல் 
*  பெருஞ் சேரல் இறும்பொறையின்  அவையில் வீற்றிருந்த புலவர்  --
   அரிசில் கிழார்
*  பதிற்றுப்பத்தில் முருகனைப் பற்றிய பாடல்கள் --  8
            - தேவி நாகராஜன்
   
 







Comments

Popular posts from this blog

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift