CBSE NET TAMIL - Nannool payiraviyal
1. பாயிரம் இன்னதென்பது?
முகவுரை, பதிகம், அணிந்துரை,
நூன்முகம், புறவுரை, தந்துரை இவை-
களைக் கொண்டது பாயிரம் . பாயிரம் என்பது வரலாறு.
2. பாயிரத்தின் வகைகள் யாவை?
பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம்
3. பொதுப்பாயிரத்தின் இயல்பு யாது?
1. நூல்திறன்
2. நுவல்வோன் திறன்(நூலைக்கூறும்
ஆசிரியர் திறன்)
3. நுவலும் திறன்(மாணவர்களுக்கு
கூறும் திறன்)
4. கொள்வோன் திறன்(நூலைக்
கேட்கும் மாணவன் திறன்)
5. கோடல் கூற்று(நூற்பொருளைக்
கேட்கும் திறன்)
4. நாற்பொருள் என்பது எவை எவை?
அறம்,பொருள் , இன்பம் ,வீடு.
5. எழுவகை மதம் எவை? எவை?
1.பிறர்கொள்கையை உடன்பட்டு
ஏற்றல்.
2.அதை மறுத்தல்.
3.பிறர் கொள்கையை முதலில் ஏற்று
பின்னர் மறுத்தல்.
4.தான்கூறிய கொள்கையை
இறுதிவரை நிலைநாட்டல்.
5.மாறுபட்ட இருவர் கொள்கைகளுள்
ஒன்றை துணிந்து ஏற்றல்.
6.பிறரது நூலின் குற்றம் காட்டல்.
7.பிறருடைய கொள்கைக்கு உடன்
படாமல் தன்கொள்கையே கொள்ளுதல்.
6. மூவகை நூல்கள் யாவை?
முதல் நூல், வழிநூல், சார்புநூல். 7. பத்துவகை குற்றங்கள் யாவை?
1.குன்றக் கூறல்
2.மிகைபடக் கூறல்
3.கூறியது கூறல்
4.மாறுகொளக் கூறல்
5.வழூஉச்சொல் புணர்த்தல்
6.மயங்க வைத்தல்
7.வெற்றெனத் தொடுத்தல்
8.மற்றொன்று விரித்தல்
9.சென்று தேய்ந்திறுதல்
10.நின்று பயன் இன்மை.
8. பத்துவகை அழகு எவை எவை?
1.சுருங்கச்சொல்லல்
2.விளங்க வைத்தல்
3.நவின்றோர்க்கு இனிமை
4.நன்மொழி புணர்தல்
5.ஓசை உடைமை
6.ஆழமுடைத்தாதல்
7.முறையின் வைப்பு
8.உலக மலையாமை
9. விழுமியது பயத்தல்
10.விளங்கும் உதாரணத்தாதல்.
9. முப்பத்திரண்டு வகை உத்திகள்
யாவை?
1.நுதலிப்புகுதல்
2.ஓத்துமுறை வைப்பு
3.தொகுத்துச் சுட்டல்
4.வகுத்துக் காட்டல்
5.முடித்துக் காட்டல்
6.முடிவிடம் கூறல்
7.தானெடுத்து மொழிதல்
8.பிறர்கோட் கூறல்
9.சொற்பொருள் விரித்தல்
10.தொடர்சொல் புணர்த்தல்
11.இரட்டுற மொழிதல்
12.ஏதுவின் முடித்தல்
13. ஒப்பின் முடித்தல்
14.மாட்டெறிந்து ஒழுகுதல்
15.இறந்தது விலக்கல்
16.எதிரது போற்றல்
17.முன்மொழிந்து கோடல்
18.பின்னது நிறுத்தல்
19.விகற்பத்தில் முடித்தல்
20.முடிந்தது முடித்தல்
21.உரைத்தும் என்றல்
22.உரைத்தாம் என்றல்
23.ஒருதலை துணிதல்
24.எடுத்துக்காட்டல்
25.எடுத்த மொழியின் எய்தவைத்தல்
26.இன்னது அல்லது இதுவென
மொழிதல்
27.எஞ்சிய சொல்லின் எய்தக்கூறல்
28.பிறநூல் முடிந்தது தானுடன் படுதல்
29.தன்குறி வழக்கம் மிக எடுத்து
உரைத்தல்
30.சொல்லின் முடிவில் அப்பொருள்
முடித்தல்
31.ஒன்றினம் முடித்தல் தன்னினம்
முடித்தல்
32.உய்த்துணர வைப்பு.
10. பொதுப்பாயிரத்தில் நன்னூலார் வேறுபட்ட நடைகளாக கூறுவது?
சூத்திரம், காண்டிகை, விருத்தி.
11. முனைவன் கண்டது என்ன?
முதல் நூல்
12. அழியா மரபினது என்ன?
வழி நூல்
13. திரிபு வேறுடையது என்ன?
புடை நூல்(சார்பு நூல்)
14. நன்னூலார் கூறும் சூத்திர நிலைகள்
எவை?
ஆற்றொழுக்கு
அரிமா நோக்கு
தவளை பாய்த்து
பருந்தின் வீழ்வு.
15. நன்னூலார் கூறும் சூத்திர வகைகள்
பிண்டம், தொகை, வகை, குறி,
செய்கை, புறனடை
16. நூலுக்கு கூறப்படும் உரையின் வகைகள் எவை எவை?
1.பாடம்
2.கருத்துரை
3.சொல்வகை
4.சொற்பொருள்
5.தொகுத்துரை
6.உதாரணம்
7.வினா
8.விடை
9.விசேடஉரை
10.விரிவு
11.அதிகாரம்
12.துணிவு
13.பயன்
14.ஆசிரிய வசனம்(மேற்கோள்
காட்டி விளக்குதல்).
17. நல்லாசிரியன் இயல்பு
1. குலன் அருள் தெய்வம் கொள்கை
மேன்மை
2. கலைபயில் தெளிவு
3. கட்டுரை வன்மை
4. நிலம் மலை நிறைகோல் மலர்
நிகர் மாட்சி
5.உலகியல் அறிவு
6.உயர் குணம்.
18. ஆசிரியர் ஆகாதவர் இயல்பு எவை?
1.மொழி குணமின்மை
2.இழிகுண இயல்பு
3.அழுக்காறு
4.அவா
5.வஞ்சம்
6.அச்சம் உண்டாகப் பேசுதல்
7.முரண்கொள் சிந்தனை
19. நன்னூலார் கூறும் ஆசிரியர் அல்-
லாதவருக்காக கூறப்படும்
உவமைகள் யாவை?
கழற்குடம், மடற்பனை, பருத்திக்
குண்டிகை, முடத்தெங்கு.
20. மூவகை மாணாக்களாக நன்னூலார்
கூறுவது?
முதல் மாணாக்கர்
இடை மாணாக்கர்
கடை மாணாக்கர்.
21.மாணாக்கர் அல்லாதவர் யார் யார்?
(அல்லது)
எவருக்கெல்லாம் நூல் கற்பிக்கப்பட
மாட்டாது என்கிறார் நன்னூலார்?
களி, மடி, மானி, காமி, கள்வன், பிணி
யன்,ஏழை(அறிவில்லாதவன்),
பிணக்கன், சினத்தன், துயில்வோன்,
மந்தன்,தொன்னூற்கு அஞ்சி தடுமா
றும் உளத்தன், தறுகணன், பாவி,
படிறன்(பொய்யன்).
22. "அழலின் நீங்கான் அணுகான்" என
யாரைக் கூறுகிறார் நன்னூலார்?
மாணவன் .
23. சிறப்புப் பாயிரத்தில் பயன்பெறும்
எட்டு எவை எவை?
1.ஆக்கியோன் பெயர்
2.வழி
3.எல்லை
4.நூற்பெயர்
5.நூற்யாப்பு
6.நுதலிய பொருள்
7.கேட்போர்
8.பயன்.
24. முதல் நூலால் பெயர்பெற்ற நூல்கள்?
இராமாயணம், மகாபாரதம்.
25. கருத்தால் பெயர் பெற்ற நூல்கள்?
அகத்தியம், தொல்காப்பியம்.
26. அளவால் பெயர் பெற்ற நூல்கள் ??
பன்னிரு படலம், நாலடி நானூறு.
27. மிகுதியால் பெயர் பெற்ற நூல்??
களவியல்.
28. பொருளால் பெயர்பெற்ற நூல்??
அகப்பொருள்.
29. செய்வித்தோனால் பெயர் பெற்ற
நூல்கள்??
சாதவாகனம், வீரசோழியம்.
30. தன்மையால் பெயர் பெற்ற நூல்கள்?
சிந்தாமணி, நன்னூல்.
31.இடுகுறியால் பெயர்பெற்ற நூல்?
நிகண்டு.
32. தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங்கள்
எவை எவை???
1.மன்னுடை மன்றத்து ஓலைத்
தூக்கில்
2.தன்னுடை ஆற்றல் உணரார்
இடையில்
3.மன்னிய அவையிடை வெல்லுறு
பொழுதில்
4.தன்னை மறுதலை பழித்த காலை.
...தேவிநாகராஜன்
Comments
Post a Comment