பழந்தமிழ் இலக்கியங்கள்---- எட்டுத்தொகை

பழந்தமிழ் இலக்கியங்கள்      -  எட்டுத்தொகை 
                                                                               பகுதி 2
*  புறநானூறு என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் ?
     ஜி.யு. போப் 
*  வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேல் செல்வது                    வஞ்சியாம் என்ற பாடல் வரிகளை கொண்ட நூல் எது?    --  புறநானூறு 
*  புறநானூறில் திணையின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
     துறை 
*  அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என அழைக்கப்படும்
    எட்டுத்தொகை நூல் ---  புறநானூறு 
*  புறநானூறு என்னும் நூலை டாக்டர் உ .வே .சாமிநாதையர் அவர்கள் எந்த
    ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார் -- 1894
*  புறநானூறு பாடல்கள் அனைத்தும் எந்த பா வகையை சார்ந்தது --
    அகவற்பா 
*  மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக்கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னன் யார்?-  சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
*  குறுந்தொகையில் 20 பாடல்களுக்கு உரை எழுதியவர் யார்? --                                  நச்சினார்க்கினியர்
*  கபிலர், பரணர், ஆகிய கடைச்சங்க புலவர்களால் பாடப்பட்டுள்ளதால்
    கடைச்சங்க கால நூல் என்று கூறப்படும் நூல் ?  - பதிற்றுப்பத்து 
*  நூலின் பதிகத்தில் முதற்பகுதி கவிதை , இரண்டம் பகுதி உரைநடையிலும்
    அமையும் நூல் -- பதிற்றுப்பத்து
*  குறுந்தொகை எந்தெந்த மன்னர்களின் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன?
    குட்டுவன், திண்டேர்ப்போறையன் , பசும்பூண் பாண்டியன், நன்னன், 
     பாரி , வல்வில் ஓரி , நள்ளி
*   "செம்புலப் பெயநீர் போல  அன்புடை நெஞ்சம் தங்கலந்தனவே "  பாடல்              இடம் பெறும் நூல்   --   குறுந்தொகை
*   "நிலத்தினும்  பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே                  சாரல்"   பாடல் இடம்பெறும் நூல்   --  குறுந்தொகை
*  "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் " பாடல் இடம்பெறுவது
     ---   குறுந்தொகை 
*  "சிறுகோட்டுப்  பெரும்பழம்  தூங்கியாங்கிவள் உயிர்தவச்  சிறிது
     காமமோ பெரிதே "  பாடல் வரி இடம்பெறுவது --  குறுந்தொகை
*  "இம்மைமாறி மறுமை ஆயினும் / நீயாகியர் எம் கணவனை / யான்                       ஆகியர்நின்  நெஞ்சு நேர்பவனே இடம்பெறுவது "  - இடம்பெறுவது
      குறுந்தொகை 
*  "வினையே ஆடவர்க்கு உயிரே ; வாணுதல் மனையுறை   மகளிர்க்கு ஆடவர்       உயிர் "  --  குறுந்தொகை
*   " பாசியற்றே பசலை காதலர் / தொடுவுழித் தொடுவுழி நீங்கி / விடுவுழி
     விடுவுழிப் பரத்தலானே" இடம் பெறுவது  --  குறுந்தொகை
*  ஐங்குறுநூறு பாடல்களைப் பாடியவர்களைக் குறிக்கும் பாடல்
      " மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் 
         கருதும் குறிஞ்சி கபிலன் - கருதிய 
         பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே 
          நூலையோ தைங்குறுநூறு " 
*  "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு  உதவுதல் போற்றுதல் என்பது
     புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் "
      --  கலித்தொகை 
*  "ஒருநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் / கடுமாப்பார்க்கும் கல்லா
     ஒருவற்க்கும் "-- புறநானூறு
*  "உண்பவை நாழி உடுப்பவை இரண்டே " ---  புறநானூறு 
*  " செல்வத்து பயனே ஈதல் "   ---புறநானூறு 
*  "செல்வத்து பயனே ஈதல் "  என பாடியவர் --  நரிவெரூஉத்தலையார் 
*  "எவ்வழி நல்லவர் ஆடவர் / அவ்வழி நல்லை வாழியநிலனே"                                       இடம்பெறுவது   --  புறநானூறு 
*  "யாதும் ஊரே யாவரும் கேளிர் "  என பாடியவர் -- கணியன்                                       பூங்குன்றனார் ( புறநானூறு)
*   "இன்னாது அம்ம இவ்வுலகம் / இனிய காண்க இதன் இயல்பு /                                     உணர்ந்தோரே"  இடம்பெறுவது ---  புறநானூறு 
*   " நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் "  இடம்
      பெறுவது   --  புறநானூறு 
*  " ஈ என இரத்தல் இழிந்தன்று அதனெதிர் / ஈயேன் என்றல் அதனினும்
     இழிந்தன்று /  கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று / அதனெதிர்
      கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று "    ---  புறநானூறு 
*  "நீரின்று அமையா / யாக்கைக்கு எல்லாம் / உண்டி கொடுத்தோர் உயிர்
      கொடுத்தோரே "      ---  புறநானூறு 
எட்டுத்தொகை நூல்களின் தொகுத்தவர்,தொகுப்பித்தவர் மற்றும்  பல           
நற்றிணை :
தொகுத்தவர்              -   பெயர் தெரியவில்லை 
தொகுப்பித்தவர்      -    பன்னாடு தந்த மாறன் வழுதி 
அடி எல்லை                -  9 முதல் 12 அடி வரை 
பாடல்கள்                    -  400
பாடிய புலவர்கள்     -  175
வாழ்த்தப்பட்டவர்    -  திருமால் 
வாழ்த்தியவர்/ வாழ்த்துப்பா பாடியவர் -  பாரதம் பாடிய பெருந்தேவனார் 

குறுந்தொகை :          
தொகுத்தவர்                -  பூரிக்கோ 
தொகுப்பித்தவர்         -  தெரியவில்லை 
அடியெல்லை                -  4 முதல் 8 அடி  வரை 
பாடல்கள்                        - 400
பாடிய புலவர்கள்         -  205 பேர் 
வாழ்த்தப்பட்டவர்        - முருகன் 
வாழ்த்தியவர்                 -  பாரதம் பாடிய பெருந்தேவனார் 

ஐங்குறுநூறு :
தொகுத்தவர்                  -  புறத்துறை முற்றிய கூடலூர் கிழார் 
தொகுப்பித்தவர்           -  மாந்தரல்சேரல் இரும்பொறை 
அடியெல்லை                  -  3 முதல் 6 அடி வரை 
பாடல்கள்                          -  500
பாடியபுலவர்கள்            -  5 பேர் 
வாழ்த்தப்பட்டவர்         -  சிவன் 
வாழ்த்தியவர்                  -  பாரதம் பாடிய பெருந்தேவனார் 

பதிற்றுப்பத்து :
தொகுத்தவர்                    -  பெயர் தெரியவில்லை 
தொகுப்பித்தவர்             -  பெயர் தெரியவில்லை 
அடியெல்லை                   -  4 முதல் 40 அடி வரை
பாடல்கள்                           -  80 (கிடைத்தவை )
பாடியபுலவர்கள்             -  10 பேர் 
வாழ்த்தப்பட்டவர்          -  சிவன் 
வாழ்த்தியவர்                   -  பாரதம் பாடிய பெருந்தேவனார் 

பரிபாடல் :
தொகுத்தவர்                  -  பெயர் தெரியவில்லை 
தொகுப்பித்தவர்           -  பெயர் தெரியவில்லை 
அடியெல்லை                  -  25 முதல் 40 அடி வரை 
பாடல்கள்                         -  70 (இதில் நமக்கு கிடைத்தவை 22 பாடல்கள் )
பாடிய புலவர்கள்          -  13 பேர் 
வாழ்த்தப்பட்டவர்         -  சிவன் 
வாழ்த்தியவர்                 -  பெயர் தெரியவில்லை 

கலித்தொகை :
தொகுத்தவர்                   -  நல்லந்துவனார் 
தொகுப்பித்தவர்            - பெயர் தெரியவில்லை 
அடியெல்லை                   -           ----
பாடல்கள்                          -   150
பாடிய புலவர்கள்           -  5 பேர் 
வாழ்த்தப்பட்டவர்          -  சிவன் 
வாழ்த்தியவர்                   -  நல்லந்துவனார் 

அகநானூறு : 
தொகுத்தவர்                 -  மதுரை உப்பூரிகுடிக்கிழார் மகனார் உருத்திர 
                                                சன்மனார் 
தொகுப்பித்தவர்          -  பாண்டியன் உக்கிரப்பெருவழுதி 
அடியெல்லை                 -  13 முதல் 31 அடி  வரை 
பாடல்கள்                         -  400.
பாடியபுலவர்கள்           -  145 பேர் .
வாழ்த்தப்பட்டவர்         -  சிவன். 
வாழ்த்தியவர்                  -  பாரதம் பாடிய பெருந்தேவனார் .

புறநானூறு :
தொகுத்தவர்                  -  பெயர் தெரியவில்லை .
தொகுப்பித்தவன்         -  பெயர் தெரியவில்லை .
அடியெல்லை                  -  4 முதல் 40 அடி வரை. 
பாடல்கள்                          -  400.
பாடிய புலவர்கள்          -  160 பேர். 
வாழ்த்தப்பட்டவர்         - சிவன். 
வாழ்த்தியவர்                  -  பாரதம் பாடிய பெருந்தேவனார் .

பதிற்றுப் பத்தில் பாடியவர், பாடப்பட்ட சேர மன்னர்கள்

பகுதிகள்                  பாடியவர்                               பாடப்பட்டவர் 
1ம் பத்து                              ---                                              ---
2ம் பத்து              குமட்டூர் கண்ணனார்           இமயவரம்பன் நெடுஞ்செரலாதன் 
3ம் பத்து              பாலை கெளதமனார்            இமயவரம்பன் தம்பி பல்யானை  
                                                                                         செல்கெழுக்குட்டுவன் 
4ம் பத்து             காப்பியாற்றுக்                          கலங்காய்க் கண்ணி நார்முடிச் 
                               காப்பியனார்                              சேரல்
5ம் பத்து              பரணர்                                      கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
6ம் பத்து              காக்கைப் பாடினியார்       ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 
                               (நச்சொள்ளையார் ) 
7ம் பத்து              கபிலர்                                         செல்வக்கடுங்கோ வாழியாதன் 
8ம் பத்து               அரிசில் கிழார்                        தகடூர் எறிந்த பெருஞ்செரல் 
                                                                                         இரும்பொறை 
9ம் பத்து             பெருங்குன்றூர் கிழார்       குடக்கோ இளஞ்செரலிரும்பொறை
10ம் பத்து           பொருந்தில்                               சேரமான் யானைக்கட் சேய் 
                               இளங்கீரனார்                           மாந்தரஞ் சேரல் இரும்பொறை
                                                     
                                                                        - தேவி நாகராஜன்





















 
      

Comments

Popular posts from this blog

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1

NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift