பழந்தமிழ் இலக்கியம் - பத்துப்பாட்டு 

  "முருகு பொருநராறு பாணிரண்டு முல்லை
   பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
  கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
   பாலை கடாத்தொடும் பத்து "

பத்துப்பாட்டு நூல்களைப் பாடியவர்கள் , அடி அளவு மற்றும் பல :

1. திருமுருகாற்றுப்படை :
அடி அளவு                          -  317
பாடிய புலவர்                   -  மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாட்டுடைத்தலைவன் - முருகன்
பொருட்பிரிவு                   -  ஆற்றுப்படை
பாவகை                              -  அகவல் (அல்லது ) ஆசிரியப்பா 
சிறப்பு                                  -  ஆறுபடை வீடு பற்றிய குறிப்பு , மற்றும் முருக                                                                 வழிபாடு.  பன்னிரு திருமுறையில் 11-வதாக
                                                    சேர்க்கப்பட்ட தொகுப்பில் இதுவும் ஒன்று .

2. பொருநராற்றுப்படை :
அடி அளவு                          -  248
பாடிய புலவர்                   -  முடத்தாமக்கண்ணியார்
பாட்டுடைத்தலைவன் -  கரிகாலன்
பொருட்பிரிவு                   -  ஆற்றுப்படை
சிறப்பு                                  -  கரிகாலன் இயல்பும் , சோழ  நாட்டின் வளமும்
                                                    சோழமன்னன் கரிகாலன் தன்னை நாடி வந்த                                                                  பாணர்களுக்கு நான்கு வெள்ளைக்குதிரைகள்
                                                    கொண்ட தேரைக் கொடுத்து "காலின் ஏழடி பின்
                                                    சென்று "என ஏழடி பின் சென்று வழியனுப்பும்                                                                  காட்சியும் இதில் உண்டு .
3. சிறுபாணாற்றுப்படை :
அடி எல்லை                       -  269
பாடிய புலவர்                   -  நத்தத்தனார்
பாட்டுடைத்தலைவன் -  நல்லியக்கோடன்
பொருட்பிரிவு                   -  ஆற்றுப்படை
சிறப்பு                                  -  கடையேழு வள்ளல்களின் சிறப்பு ;  மூவேந்தர்களின்                                                      நாட்டு வளம், பெருமை ;  நல்லியக்கோடனின்                                                                   பண்பும் ; வஞ்சி,கொற்கை,  மதுரை ,உறந்தை                                                                  நகரங்களின் சிறப்பு பற்றிய   தகவல்கள் .  

4. பெரும்பாணாற்றுப்படை :
அடி எல்லை                        -    500
பாடிய புலவர்                    -  உருத்திரங்கண்ணனார்
பாட்டுடைத்தலைவன்  -  தொண்டைமான் இளந்திரையன்   
பொருட்பிரிவு                    -  ஆற்றுப்படை
சிறப்பு                                   -  ஐந்திணை வருணனை ,இளந்திரையன் சிறப்பு ,                                                              மாட்டுவண்டியில் செல்லும் உப்பு வணிகர்                                                                         கழுதையின்  மேல் பண்டங்களை கொண்டு                                                                       செல்லும் பிற வணிகர் பற்றிய தகவல்கள், காட்டு
                                                    மக்களின் வாழ்க்கையும் விருந்தோம்பலும் ,
                                                    குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கை முறை, இடையர்
                                                    குடியிருப்பு, முல்லை நிலத்தினர் பயணிகளுக்கு
                                                    அளிக்கும் உணவு, மருதநில காட்சி விருந்தோம்                                                              பலும், சர்க்கரை ஆலை,மீனவர் அந்தணர்                                                                          குடியிருப்பு, காஞ்சிபுரம் சிறப்பும் 
5. முல்லைப் பாட்டு :
அடி எல்லை                        -  103
பாடிய புலவர்                    -  நப்பூதனார்
பாட்டுடைத்தலைவன்  -  நெடுஞ்செழியன்
பொருட்பிரிவு                    -  அகம் பற்றிய நூல்
சிறப்பு                                   -  சங்ககால மக்களின் விழுமிய வாழ்க்கை நிலை ,
                                                     வீரர்களின் மனைவி , ஏழு மாடத்து அரண்மனை
                                                     செய்திகள் . மன்னனின் பாசறை,பாசறையில் பணி
                                                    புரியும் பெண்கள் ,தண்ணீர் மணி காட்டி , தன்                                                                  வீரர்களை நினைத்து வருந்தும் மன்னன்                                                                             போன்றவற்றை காணலாம் .

6. மதுரைக்காஞ்சி:
அடி எல்லை                        -  782
பாடிய புலவர்                    -  மாங்குடி மருதனார்
பாட்டுடைத்தலைவன்  -  பாண்டியன் நெடுஞ்செழியன்
பொருட் பிரிவு                   -  புறம் பற்றிய நூல்
சிறப்பு                                   - பாண்டிய மரபும் மதுரை சிறப்பும், நெடுஞ்                                                                         செழியனின் நால்வகை படை சிறப்பு, பாணர்
                                                  களுக்கு யானைகளையும் பொன்னால் செய்த
                                                  தாமரை மலர்களை மன்னன் கொடுப்பது ,பாண்டிய
                                                  நாட்டின் மருதம்,முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல்
                                                  ஆகிய நிலங்களின் சிறப்பு,மதுரை நகரின் கோட்டை                                                   யும் அகழியும் , நாளங்காடி ,இரவங்காடி ,பௌத்த ப்
                                                   பள்ளி,சமணப்பள்ளி,அந்தணர்ப் பள்ளி ,நீதி மன்றம்,
                                                 இரவின் மூன்று சாமங்களில் நடக்கும் நிகழ்ச்சி
                                                 மதுரையின் ஒலிகள் போன்றவற்றைக் காணலாம் .

7. நெடுநல்வாடை :
அடி எல்லை                         -  188
பாடிய புலவர்                     -  நக்கீரர்
பாட்டுடைத்தலைவன்   -  பாண்டியன் நெடுஞ்செழியன்
பொருட் பிரிவு                    -  புறம் பற்றிய நூல்
சிறப்பு                                    - கூதிர் கால நிலைப்பாடும் தலைவன் தலைவி
                                                     மனப்பாங்கும் , நீண்ட குளிர் காலத்தினால் துன்பத்                                                      தில் தவிக்கும் இடையர்கள், பறவைகள்,குரங்குகள்,
                                                    மற்றும் மாடுகள், மழைக்காலத்தின் செழிப்பு ,
                                                    மாலைநேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடும் பெண்கள்,
                                                    அரண்மனையைக் கட்டும் வல்லுநர்கள், அரசியின்
                                                    வேலைப்பாடு அமைந்த கட்டில்   போன்றன .   

8. குறிஞ்சிப்பாட்டு :
அடி எல்லை                        -  261
பாடிய புலவர்                    -  கபிலர்
பாட்டுடைத்தலைவன்  -  ஆரிய அரசன் பிருகத்தன்
பொருட் பிரிவு                   -  அகம் பற்றிய நூல்
சிறப்பு                                   -  ஆரிய அரசனுக்கு தமிழின் பெருமையை  உணர்த்
                                                     துதல் , 99 வகை பூக்களின் பெயர்கள் , அறத்தோடு
                                                     நிற்றல் ,இரவில் தலைவனை சந்திக்க வரும்போது
                                                     தலைவி படும் இன்னல்கள் போன்றன .

9. பட்டினப்பாலை :
அடி எல்லை                        -  301
பாடிய புலவர்                     -  உருத்திரங்கண்ணனார்
பாட்டுடைத்தலைவன்    -  கரிகாலன்
பொருட் பிரிவு                    -  அகம் பற்றிய நூல்
துறை                                      -  செலவழுங்கல் துறை
சிறப்பு                                    -  காவேரி பூம்பட்டினம் , திருமாவளவன் சிறப்புகள் ,
                                                       முனிவர்களின் தவப்பள்ளிகள் ,மறவர்களின்
                                                      விளையாட்டுக்களம் ,பரதவர் இருப்பிடம்,                                                                           கரிகாலனின் போர்த்திறன்,வரிவசூல் போன்றன.

10. மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை ):
அடி எல்லை                           -  583
பாடிய புலவர்                       -  பெரும் கௌசிகனார்
பாட்டுடைத்தலைவன்     -  நன்னன் சேய் நன்னன்
பொருட்பிரிவு                       -  ஆற்றுப்படை
சிறப்பு                                      -  இசையின் அருமையும் உவமைச்சிறப்பும் ,
                                                        நன்னனின் நாட்டு வளம், பாணர் குடும்பம்                                                                        பல்வேறு  இசைக்கருவிகளை சுருக்குப்பைகளில்
                                                       கட்டிக்கொண்டு செல்வது , நவிர மலையின்                                                                       சிறப்பு, இரவில் பயணம் செய்ய கூடாது என்ற                                                                  அறிவுரை, கவணிடமிருந்து தப்புதல்,வழுக்கி                                                                    விழாமல் பாதையில் செல்லுதல்,இரவில் குகையில்                                                        தங்குதல், மலைப்பாம்பிடமிருந்து தப்புதல்,                                                                        வழியில் காணும் கோட்டைகளும் நடுகற்களும்                                                                 போன்றன.

*  ஆற்றுப்படுத்துதல் என்பது  - நெறிப்படுத்துதல், வழிகாட்டுதல் .
*  பத்துப்பாட்டில் நூல்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன ?
     ஆற்றுப்படை நூல்கள் (5)
     அகநூல்கள் (3)
      புறநூல்கள் (2)
*  பத்துப்பாட்டில் இடம்பெற்ற பெண்பாற் புலவர் - முடத்தாமக்கண்ணியார் 
    (பொருநராற்றுப்படை )
*  பத்துப்பாட்டில் சிறிய பாடல் அடிகளைக் கொண்ட நூல் -  முல்லைப்பாட்டு    (103 அடிகள் )
*  பத்துப்பாட்டில் நீண்ட பாடல் அடிகளைக் கொண்ட நூல்
    மதுரைக்காஞ்சி (782 அடிகள் )
*  சோழரின் பழைய தலைநகரம் - காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார் )
*  சோழரின் பிற்கால தலைநகர் - உறையூர் 
*  கடியலூரில் 1000 கால் மண்டபம் யாருக்காக யாரால் கட்டப்பட்டது -
    உருத்திரங்கண்ணனாருக்காக ,கரிகாற் பெருவளத்தானால் 
*  மாந்தரஞ் சேரல் இரும்பொறையை வென்ற பாண்டிய மன்னன் - 
     தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் 
*  பத்துப்பாட்டில் மிகவும் சிறப்பான பாடல் - குறிஞ்சிப்பாட்டு 
*  ஆற்றுப்படை நூல்கள் சிறப்பு செய்வது - மன்னர்களின் கொடைத்திறன் 
*  பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்து போல அமைவது -
      திருமுருகாற்றுப்படை 
*  ஆரிய அரசன் பிருகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்கு பாடிய பாடல் -
    குறிஞ்சிப்பாட்டு 
*  பத்துப்பாட்டு அமைந்துள்ள பா வகை -  ஆசிரியப்பா 
*பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் - நச்சினார்க்கினியர்
*  புலவராற்றுப்படை என்பது -  திருமுருகாற்றுப்படை 
*  11ம் திருமுறையில் சேர்க்கப்பட்ட ஆற்றுப்படை நூல் -                                                       திருமுருகாற்றுப்படை 
*  வெண்ணி போரில் வெற்றி பெற்றவன் - கரிகாலன் 
*  மலையக மக்கள் தங்களது குறிஞ்சித்தேனையும் ,கிழங்குகளையும்
    நெய்தல் நில மக்களுக்கு  கொடுத்து விட்டு பண்ட மாற்றாக கள்ளினையும்,
    மீனையும் பெறும் செய்தி கூறப்பட்டுள்ள நூல் -  பொருநராற்றுப்படை 
*  சிறுபாணாற்றுப்படை காட்டும் கடையெழு வள்ளல்கள்
    பேகன் , பாரி, ஓரி, காரி , ஆய் , அதிகன் , நள்ளி .
*  மயிலுக்கு போர்வை அளித்தவன் -  பேகன் 
*  முல்லைக்குத்தேர் தந்தவன் - பாரி 
*  ஈர நன்மொழி கூறுபவன் - காரி 
*  நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு(குற்றால நாதர் )                அணிவித்தவர் - ஆய் 
*  நெல்லிக்கனியை அவ்வைக்கு அளித்தவன் - அதிகன் 
*  நண்பர்களுக்கு எல்லா வசதிகளும் செய்தவன் , துளிமழை பொழியும்
    நளிமலை நாடன் -  நள்ளி 
*  தன் குறும்பொறை நாடு முழுவதும் யாழ் மீட்டும் பாணர்க்கு கொடுத்தவன் -     ஓரி 
*  " மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து ஆனா விருப்பில் தான்                  நின்று ஊட்டி " பாடல் குறிப்பது -  இளந்திரையனின் விருந்தோம்பல் 
    (பெரும்பாணாற்றுப்படை )
*  கூத்தராற்றுப்படை என்பது - மலைபடுகடாம் 
*  மலைபடுகடாம் இல் 'கடாம் ' என்பது - ஆகுபெயர் (ஓசை உணர்த்திற்று )
*  தொல்காப்பியத்தில் 'தோல் ' என்னும் வனப்பிற்க்கு எடுத்துக்காட்டாக
     கூறத்தக்க பாடல் - மலைபடுகடாம் 
*  "இருங்கல் அடார் " என்பது -  காட்டுப்பன்றிகளைப் பிடிக்க வைக்கும்                     பொறி .
*  நன்நிமித்தம் என்னும் விரிச்சி இடம் பெறுவது - முல்லைப்பாட்டு 
*  உல்கு  என்னும் வரி பெறப்பட்டதைக் குறிப்பிடும் நூல் -  பட்டினப்பாலை
*  'வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் ' எனப் பாண்டியனது அடையாளப்        பூவாகிய வேம்பினைக்குறிப்பிடும் நூல் - நெடுநல்வாடை 
*  வானில் இயங்கும் ஞாயிறு திங்கள் போன்ற கோள்களும், ரோகிணி                      முதலிய விண்மீன்களும்  கட்டிலின் மேல் கட்டப்பட்டுள்ள துணியில்
    வரையப்பட்டுள்ளன என்று குறிப்பிடும் நூல் -  நெடுநல்வாடை 
*  கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார் 
*  குறிஞ்சிக் கிழவன் - முருகன் 
*  குதிரைப்படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம் 
*  யாருடைய இளமைக்காலம் , போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை
    விவரிக்கிறது -  கரிகால சோழன் 
*  திருமுருகாற்றுப்படை என்னும் நூலை 1834இல் முதன் முதலில்
     பக்திப் பாசுரமாக பதிப்பித்தவர் - சரவணப்பெருமாளையர் 
*  திருமுருகாற்றுப்படை என்னும் நூலை 1889ம் ஆண்டு பதிப்பித்தவர் -
     உ .வே.சா 
*  வையை ஆறு, மதில், அகழி வருணனை இடம் பெறுவது -
    மதுரைக்காஞ்சியில் 
*  நாளங்காடி, அல்லங்காடி வருணனை இடம்பெறுவது - மதுரைக்காஞ்சி
*  நிலையாமையை வலியுறுத்தும் பாடல் - மதுரைக்காஞ்சி 
*  பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாங்கானத்து போரில் சேர சோழ
    வேந்தரையும், குறுநில மன்னர் ஐவரையும் வென்ற செய்தியையும் ,
     வெள் இலை ஆகிய ஊர்களைக் கைக் கொண்டதையும் குறிப்பிடும்
     நூல்  - மதுரைக்காஞ்சி 
*  பாண்டிய நெடுஞ்செழியன் சாலியூரை வெற்றி கொண்டதைக் குறிப்பிடும்
    நூல் - மதுரைக்காஞ்சி
*  பாண்டியன் அவையில் அறங்கூறும் அவையம் இருந்ததைக் குறிப்பிடும்
    நூல் - மதுரைக்காஞ்சி
*  'கண்மாறு ஆடவர் ' என்று குறிப்பிடப்படுபவர் யார் ?  -  கள்வர் 

                                                                        -  தேவி நாகராஜன் .
                                                   




































                                                                                             








                                                   




Comments

Popular posts from this blog

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1

NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift