சிலப்பதிகாரம் (ஐம்பெருங்காப்பியங்கள் 1)
             

* காப்பியங்கள் சிறு காப்பியம் பெரு காப்பியம் என இரு வகைப்படும் .
* அறம் ,பொருள் ,இன்பம், வீடு ஆகிய நான்கின் பயனாய் வருவது
             பெருங்கப்பியம் 
*  காப்பியம் குறித்த இலக்கணம் கூறும் நூல்
             தண்டியலங்காரம் 
*  இரட்டைக் காப்பியங்கள்  -  சிலப்பதிகாரம் , மணிமேகலை .
*  சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை  - சிலப்பதிகாரம்,                                      மணிமேகலை .
*  சோழர் காலத்தில் தோன்றிய பெருங் காப்பியங்கள் - குண்டலகேசி,
    வளையாபதி , சீவக சிந்தாமணி .
*  தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களிலேயே சிலப்பதிகாரம்,                               மணிமேகலை, பெரியபுராணம்         ஆகியவை  மட்டுமே தமிழ் நாட்டுக்         கதைகளை மூலக்கருவாகக் கொண்டு இயற்றப்பட்டவை.
*  பிற காப்பியங்கள்  யாவும்  சமஸ்க்ருதம் மற்றும் பிராகிருதம்                              மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழ் மொழிபெயர்ப்பாகவோ          இயற்றப் பட்டவை.
*  சிலப்பதிகாரத்தை இயற்றியவர் --  சேர நாட்டவரான இளங்கோவடிகள்
    (கி.பி. இரண்டாம்  நூற்றாண்டு ) .
சிலப்பதிகாரம் கூறும் நாயகன் நாயகி சோழநாட்டை சார்ந்த கோவலன்       கண்ணகி.
*  சிலம்பு கூறுவது  "அரசியல்  பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ,
                                  உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ,
                                  ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் "
பாட்டிடையிட்ட தொடர்நிலைச்  செய்யுள், குடிமக்கள் காப்பியம்                          என்றெல்லாம் அழைக்கப்படுவது  -  சிலப்பதிகாரம் .
*  தேவாரம், திவ்யபிரபந்தம் , கம்பராமாயணம்,சீவக சிந்தாமணி போன்ற
    நூல்கள் "விருத்தப்பா " என்னும் பா வகையை தோற்றுவிப்பதற்கு
    முன்னரே வழக்கில் இருந்த "ஆசிரியப்பா " நடையில் அமைந்த                             சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை.
*  தனது இளவரசு பட்டத்தை துறந்து தனது அண்ணன் செங்குட்டுவனுடன்
     மலை வளம் காண சென்ற போது , கண்ணகியைப் பற்றிய செய்தியை
     சீத்தலை சாத்தனார் மூலம் அறிந்தவர் -  இளங்கோவடிகள்
*  சிலம்பில் கூறப்படும் ஆறுகள் மற்றும் நகரங்கள் எவை எவை ?
      ஆறுகள் - காவிரி, வைகை 
       நகரங்கள் - புகார் , உறந்தை, மதுரை, வஞ்சி 
*  சிலம்பு கூறும்  இசைப்பாட்டுகள் - கானல்வரி, வேட்டுவ வரி , ஆற்றுவரி ,       ஊசல்  வரி, கண்புகுவரி.
*  சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது - புகார் கண்டம் ,
    மதுரைக் காண்டம் , வஞ்சிக் காண்டம் 
*  கோவலனின் தந்தை பெயர் - மாசாத்துவான் எனும் செல்வந்தர் .
*  கண்ணகியின் தந்தையின் பெயர் - மாநாய்கன் எனும் வணிகன் .
*  மாநாய்கனின் தொழில் என்ன -  நாவாய்களை கடலில் ஓட்டும் வணிகன் 
*  கோவலனை பாண்டியன் கொலை செய்ததை அறிந்து துறவு பூண்ட
    இருவர் - மாசாத்துவான் மற்றும் மாநாய்கன் .
*  கோவலன் கண்ணகி மதுரை செல்லும்போது  வழித்துணையாக இருந்தவர்
     யார் ?  - கவுந்தியடிகள் .
*  'நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ யார்?' என யார்                        யாரைப்   பார்த்து கூறியது - பாண்டிய மன்னன் கண்ணகியிடம் 
*  கவுந்தியடிகள் கோவலன் கண்ணகியை யார் வீட்டில் அடைக்கலமாகத்
    தங்க வைத்தார்? - மாதரி (இடைக்குல மூதாட்டி )
*  கோவலன் கொலையுண்டதை யார் மூலம் கண்ணகி அறிகிறாள் -
    மாதரி .
*  கண்ணகி தன் கணவன் இறந்த துயர் கேட்டு துன்புறும் போது அவளை
     குரவைக் கூத்தாடி மகிழ்விக்க விழைந்தவள் - மாதரி .
*   'எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துக்களே ' இது யார் கூற்று -
      பாண்டிய மன்னன்.
*   கண்ணகியின் சிலம்பு மாணிக்கங்களால் ஆனது .
*   புகார் காண்டத்தின் காதைகள்  - 10 காதைகள் (மங்கல வாழ்த்துப் பாடல்,         மனையறம்  படுத்த காதை , அரங்கேற்று காதை , அந்திமாலை                               சிறப்புசெய் காதை ,இந்திர விழவூரெடுத்த காதை , கடலாடு காதை ,                   கானல் வரி, வேனிற்க் காதை , கனாத்திறம் உரைத்த காதை , நாடுகாண்           காதை )
*  திருமணத்தின் பொது கோவலன் கண்ணகி வயது என்ன -  கோவலன் 16,
    கண்ணகி 12.
*  சோழ  மன்னனின் பச்சை மலையையும்  'தலைக்கோலி ' என்னும் பட்டமும்
    பெற்றவள் - மாதவி 
*  தனது ஆடல் திறமையினால் நாடக கணிகையருக்கு 'தலைவரிசை' என              நூல்கள் விதித்த முறைமையின் படி 1008 கழஞ்சு பொன்னை ஒருநாள்                  முறையாகப் பெறுபவள் யார் ? - மாதவி . 
*  மாதவியின் மாலைக்கு கோவலன் கொடுத்த விலை - ஆயிரம் பொன் .
*  புகார் நகரில் இளங்கோவடிகள் சிறப்பிக்கும் இரு இடங்கள்
     மருவூர் பாக்கம் , பட்டினப் பாக்கம் .
*  சிலம்பு கூறும் ஐவகை மன்றங்கள் யாவை ?
     தெய்வமன்றம், இலஞ்சி மன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க                       மன்றம்,  பாவை மன்றம்.
*  மாதவி சார்பாக கோவலனிடம் தூதாக சென்ற மாதவியின் தோழி
    வசந்த மாலை 
*  கண்ணகி தான்  கண்ட கனவை யாரிடம் கூறி வருந்தினாள் ?
    தேவந்தி 
*  மதுரைக் காண்டத்தின் காதைகள் :  13
    காடுகாண் காதை , வேட்டுவ வரி, புறஞ்சேரி இறுத்த காதை , ஊர்காண்
    காதை , அடைக்கலக் காதை , கொலைக்களக் காதை , ஆய்ச்சியர் குரவை,
    துன்ப மாலை , ஊர்சூழ் வரி, வழக்குரை காதை , வஞ்சின மாலை ,
    அழற்படு காதை , கட்டுரைக் காதை போன்றன.
*  கானுறை தெய்வம் வசந்த மாலையின் வடிவிலே சென்று கோவலன்                 கண்ணகி மதுரை போவதை தடை செய்தது.
சிலப்பதிகாரத்தில் சாலினி தெய்வம்சாலி என்னும் சொல் நெல்லை          குறிக்கும்.  மறவர் இனத்தில் மகளாகப் பிறந்து சாமி ஆடி குறி சொல்பவள் .      கொற்றவை தெய்வத்தை சாலினி என்றனர்.கருவுற்றிருந்த பெண்கள்                யாழ், முழவு, ஆகுளி முழக்கத்துடன் சாலினிக்கு பொங்கலிட்டு                            படைத்தனர்.  விண்ணின் வடதிசை விண்மீன்கள் 7. அவற்றுள் சாலினியும்        ஒன்று .  இதனை வடநூலர் அருந்ததி என்பர். மற்ற விண்மீன்கள் போல்              இடம் மாறி தோன்றாமல் ஒரே இடத்தில் தோன்றுவதால் மனம் மாறாத               கற்புடைய பெண்ணாக உருவகம் செய்வர் .
*  மாதவியின் கடிதத்தை கோவலனுக்கு கொண்டுவந்தது - கௌசிகன்                    (கோசிகன்) என்னும் பிராமணன் .
*  கண்ணகி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தந்த இலங்கை மன்னன் -
     கயவாகு (கஜபாஹு )
*  கண்ணகி சிலை செய்ய இமயமலையில் இருந்து கல் எடுத்து , புனித
    கங்கையில் நீராட்டி , சேர நாட்டிலுள்ள வஞ்சி நகருக்குக் கொண்டு
    வந்தனர்.
*  கண்ணகி தனது இடது முலையை திருகி எறிந்து மதுரை மீது வீசினாள் .
    மதுரை எரிந்தது .
*  மதுரை கொழுந்து விட்டு எரியும்போது அக்கினி பகவானிடம் கண்ணகி
    "பிராமணர்கள், சந்நியாசிகள், கோமாதா, பத்தினி,ஸ்த்திரீக்கள் ,                  குழந்தைகள், கிழவி, கிழவன் ஆகியோரை ஒன்றும் செய்யாதே.                     மற்ற  எல்லா  தீயவர்களை சாம்பல் ஆக்குக " என்றாள் .

"பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் , மூத்தோர் ,கிழவி எனும்
இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தோர் பக்கமே சேர்க "

*  'நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
     மாமறை முதல்வன் மாடலன் என்போன் ' யார் கூற்று ?
      இளங்கோவடிகள் மாடல மறையோனைப் பற்றி கூறுவது.
*  இளங்கோவடிகள் கூறும் வீணைக்கு பெயர் போன ஒரு புராண புருஷர்
    யார்?
     நாரதர்.  ( 'நாரதன் வீணை நயம்தெரிபாடலும் ')
*  பாண்டிய மன்னன் ஆயிரம் பொற்கொல்லர்களை கண்ணகிக்கு பலி               கொடுத்தார் .
    "பொன்தொழில் கொல்லர் ஈர் ஐஞ்நூற்றுவர்
     ஒருமுலை குறைந்த திருமா பத்தினிக்கு
     ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி ".
*   சேரன் செங்குட்டுவனால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ் மன்னர்களை                      இகழ்ந்த  வட  இந்திய மன்னர்கள் - கனகன் , விஜயன் .
*  'ஆடித்திங்கள் பேரிருள் பக்கத்து 
     அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று 
     வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண ' இக்கூற்று மதுரை எரியப்போவதை
     முன்காலத்திலே ஆருடம் சொன்னதாக இளங்கோ கூறுகிறார் .
(ஆடி மாதம் , கிருஷ்ணபக்ஷம் ,கார்த்திகை நக்ஷத்ரம் ,வெள்ளிக்கிழமை
அன்று மதுரை சாம்பலாகும் )
*  புனல் ஆறு அன்று; இது பூம்புனல் ஆறு என்று கவுந்தியடிகள் பாராட்டிய
    நதி - வைகை நதி .
*  "நடந்தாய் வாழி காவேரி "
*  " வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
       பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
       குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
       வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
        தென்திசை ஆண்ட தென்னவன் வாழி !"
                                                    -  காடுகாண்காதை , சிலம்பு .
*  கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிய பின் அவள் முன் தோன்றிய
    தெய்வம் - மதுராபதி தெய்வம் .
*  கண்ணகி வானகம் எப்போது யாருடன் சென்றாள் ?
     திருச்செங்குன்றத்தில் இருந்து , கோவலன் இறந்த 14 நாட்கள் கழித்து 
     வானவருடன் வந்த தன்  கணவன் கோவலனுடன் கண்ணகி  வானகம்         சென்றாள் .
*  கண்ணகி சிலைக்கு பூஜை செய்ய அனுமதி பெற்றவள் - தேவந்தி .

வஞ்சிக் காண்டத்தின் காதைகள் - 7
    (குன்றக் குரவை , காட்சிக் காதை , கால்கோள் காதை , நீர்ப்படைக் காதை ,
     நடுநற் காதை , வாழ்த்துக் காதை , வரம் தரு காதை )
*  கவுந்தியடிகளின் சமயம் - சமணம் .
*  'மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் 
     உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே '
                                           - சிலம்பு.
*  'இப்பத்தினிக் கடவுளை பரவல் வேண்டும் ' என்று யார் யாரிடம் கூறியது ?
     சேரனிடம் இருங்கோ வேண்மாள் கூறியது.
*  சிலப்பதிகாரத்திற்கு அரும்பதவுரை எழுதியவர் - அரும்பத                                        உரையாசிரியர்.
*  சீர்பாடும் பாடல்கள் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் இடம்
    பெறுகிறது.
*  கண்ணகி விண்ணகம் சென்றதை குன்றக்குரவையர்கள் சேர                             மன்னனிடம்  கூறினர் .
*  தமிழ் மொழியில் முதன்முதலாக தோன்றிய காவியம் - சிலப்பதிகாரம்.
*  குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கை சித்தரிக்கப்படுவது
       குன்றக்குரவையில் *  முல்லைநில மக்கள் வாழ்க்கை சித்தரிக்கப் படுவது
      ஆய்ச்சியர் குரவையில்
*  மருதநில மக்கள் வாழ்க்கை சித்தரிக்கப்படுவது
    கானல் வரி  (கடலாடு காதை ) 
*  பாலைநில மக்கள் வாழ்க்கை சித்தரிக்கப்படுவது
      வேட்டுவ வரியில் 
*  சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்
அடியார்க்கு நல்லார்.
*  'பிறவா யாக்கை பெரியோன் ' யார் யாரைக் கூறியது
    இளங்கோவடிகள் சிவனை கூறியது கண்ணகி வழிபாடாக அமைந்த தெய்வம் மாரியம்மன் என்றும் கூறுவர் .
*  சிலம்பில் கனல் வரி விருத்தப்பா வகையை சார்ந்தது.
                                                     

                                                                                 தேவி நாகராஜன் .                                             ***********                                                                                        












                                        

Comments

Popular posts from this blog

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பழந்தமிழ் இலக்கியங்கள் ---- எட்டுத்தொகை ... பகுதி 1

NTA UGC - NET December 2018 PAPER 2 TAMIL Questions with keys - 21/12/2018 - second shift