மணிமேகலை (ஐம்பெருங்காப்பியங்கள் 2)
* மணிமேகலையை இயற்றியவர் - சீத்தலை சாத்தனார்
* மணிமேகலை துறவறத்தை வலியுறுத்தும் காப்பியம் .
* மணிமேகலையின் பெற்றோர் - கோவலன் , மாதவி .
* மணிமேகலை மீது காதல் கொண்ட சோழ மன்னன் - உதயகுமரன் .
* மணிபல்லவம் என்னும் தீவில் மணிமேகலையை விட்ட கடலின் கடவுள்
மணிமேகலா தெய்வம் .
* மணிமேகலைக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் பெயர் - அமுதசுரபி .
* உதயகுமாரனிடம் இருந்து தப்பிக்க மணிமேகலை காயசண்டிகையாக
உருமாறிக்கொண்டாள் .
* மணிமேகலையின் ஆசான் - அறவண அடிகள் .
* மணிமேகலையின் நம்பகமான தோழி - சுதமதி .
* மணிமேகலை நியாயப்பிரவேசம் என்ற நூலை பின்பற்றி தோன்றியது.
* மணிபல்லவம் எனும் தீவிலுள்ள ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள் .
* உதயகுமாரனை கொலை செய்தவன் - கஞ்சனன் (காயசண்டிகையின்
கணவன்)
* மணிமேகலையின் காலம் - பொ .ஆ .450 - பொ .ஆ .550 (சோ.ந. கந்தசாமி அவர்களின் கருத்து )
* பாவ்லா ரிச்மேன் மணிமேகலையின் காலம் போ.ஆ .6ம் நூற்றாண்டு என்கிறார் .
* எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை திண்ணாகருக்கும் நியாயப் பிரவேசத்திற்கும் முற்பட்டது(5ம் நூற்றாண்டு) என்கிறார்.
* 10 சமயக் கணக்கர் - 1. ஆசீகவாதி
2. சாங்கியவாதி
3. சைவவாதி
4. நிகண்டவாதி
5. பிரமவாதி
6. பூதவாதி
7. பெளத்தவாதி
8. வேதவாதி
9. வைசேடிகவாதி
10. வைதீகவாதி
* " அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்லை."
- மணிமேகலை
* மணிமேகலை கூறும் ஐம்பெருங்குழு -
1. அமைச்சர்
2. சடங்கு செய்விப்போர்
3. படைத்தலைவர்
4. தூதர்
5. சாரணர் (ஒற்றர் )
* எண்பேராயம் - 1. கரணத்தியலவர்
2. கருமவிதிகள்
3. கனகசுற்றம்
4. கடைக்காப்பாளர்
5. நரகமாந்தர்
6. படைத்தலைவர்
7. யானை வீரர்
8. இவுளி மறவர்
*
Comments
Post a Comment